news

News June 17, 2024

அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள்

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாததால், அக்கட்சித் தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் திமுகவுக்குதான் வாக்களிப்பார்கள் என்றும் அதனை சிதறாமல் பெற வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

News June 17, 2024

வணிக தளங்களில் பணமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பு

image

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஆன்லைன் வழி பணப்பரிமாற்றம் செய்வதில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது. ஆன்லைன் வணிக தளங்களில் பணமில்லா பரிவர்த்தனை 2018ஆம் ஆண்டு 20.4%ஆக இருந்தது. இது 2023ஆம் ஆண்டு 58.1%ஆக உயர்ந்துள்ளதாக ‘குளோபல் டேட்டா’ என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

News June 17, 2024

மன்னிப்பு கோரிய கேரள காங்கிரஸ்

image

போப் பிரான்சிஸ்-பிரதமர் மோடி சந்திப்பு தொடர்பான X பதிவுக்கு, கேரள காங்கிரஸ் மன்னிப்பு கோரியுள்ளது. G7 மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக இத்தாலி சென்ற மோடி, அங்கு போப் பிரான்சிஸை சந்தித்தார். இதனை, ’கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு, போப்புக்கு கிடைத்ததாக’ கேரள காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதன் மூலம் கிறிஸ்தவர்கள் இழிவுபடுத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டிய நிலையில், பதிவு நீக்கப்பட்டுள்ளது.

News June 17, 2024

ரயில் விபத்தை தொடர்ந்து 19 ரயில்கள் ரத்து

image

மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அவ்வழியாக இயங்கும் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா – நியூ ஜல்பைகுரி வந்தேபாரத், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், தாம்பரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

News June 17, 2024

இந்த லிங்கை கிளிக் செய்தால் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும்

image

பிஎம் கிஷான் திட்டத்தின் 17ஆவது தவணை தொகையைப் பெற இங்கே கிளிக் செய்யவும் என்ற செய்தி வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. அவ்வாறு வந்த மெசேஜ் லிங்கை கிளிக் செய்த 10 பேரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள சைபர் கிரைம் போலீசார், போலி தகவல்களை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.

News June 17, 2024

EVM குறித்து செய்தி வெளியிட்ட ஊடகம் மீது வழக்கு

image

மகாராஷ்டிராவில் OTP மூலம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்ட ‘மிட் டே’ செய்தி ஊடகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள EVM இயந்திரங்களில் இணைய இணைப்பு மற்றும் ப்ளூ டுத் உள்ளிட்ட வயர்லெஸ் இணைப்புகள் இல்லை எனவும், இதனால், ஹேக்கிங் சாத்தியங்களுக்கு முற்றிலும் வாய்ப்பில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

News June 17, 2024

கிறிஸ்தவ மக்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது: பாஜக

image

போப் பிரான்சிஸ், மோடி சந்திப்பு தொடர்பான காங்கிரஸின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற மோடி, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். இது தொடர்பாக X பக்கத்தில் கருத்து தெரிவித்த கேரள காங்கிரஸ், இறுதியாக போப் பிரான்சிஸுக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியிருந்தது. இதன் மூலம் காங்கிரஸ் கிறிஸ்தவ மக்களை அவமதித்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

News June 17, 2024

நாளை 17ஆவது தவணை ₹2000-ஐ விடுவிக்கிறார் மோடி

image

வாரணாசி தொகுதியில் வென்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதன்பின், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்டத்தில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலா ₹2000 தொகையை பெறுவார்கள். மேலும், கிருஷி சாகிஸ் பயிற்சி அளிக்கப்பட்ட 30,000 சுயஉதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.

News June 17, 2024

மோடி அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி?

image

NDA கூட்டணி அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் தர தொடங்கியுள்ளன. குறிப்பாக, கருத்துக்கணிப்பு மூலம் பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். அதை தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென வலுவான குரல் எழுந்துள்ளது. தற்போது, மே.வங்க ரயில் விபத்திற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

News June 17, 2024

தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம்

image

பத்திரப்பதிவு முடிந்த உடன், தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நிலம், வீடு போன்ற சொத்துகளை வாங்குபவர்கள், அதன் பரப்பளவில் மாற்றம் இல்லாவிட்டால் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில், தேவையான தகவல்களை உள்ளீடு செய்து ஆன்லைன் பட்டாவை பதிவிறக்கம் செய்யலாம்.

error: Content is protected !!