India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பப்புவா நியூ கினியா 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதிகபட்சமாக சார்லஸ் அமினி 17 ரன்கள் எடுத்தார். நியூசி., சார்பில் சிறப்பாக பந்துவீசிய பெர்குசன் 4 ஓவர்கள் வீசி ரன்கள் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். போல்ட், சௌதி, சோதி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மூலதன பொருட்களின் விலை உயர்வு காரணமாக, FMCG பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில், சோப்பு, பாடி வாஷ் ஆகியவை 2% முதல் 9% விலை உயர்ந்துள்ளன. ஹேர் ஆயில் 8% முதல் 11% வரையிலும், குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலை 3% முதல் 17% வரையிலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பால், சர்க்கரை, பாமாயில், காபி தூள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.
மணிகண்டன், மீதா ரகுநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘குட் நைட்’. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விநாயக் சந்திரசேகரனுக்கும், பிரியா என்ற பெண்ணுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக் போன்ற நெருங்கிய நடிகர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். மணமக்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நியூ ஜல்பைகுரி அருகே இன்று காலை கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு ரயில்வே துறையின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவர் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்கள் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டை (W,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,W,0,0,0,0,0,W,0,0,0,0) கைப்பற்றினார். இதற்கு முன் இதுவரை யாரும் இப்படியொரு சாதனையை படைத்ததில்லை. டி20 வரலாற்றில் இதுவே முதல்முறை.
டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ₹24.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் 2024ஐ தமிழக அரசு சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது.
MCLR எனப்படும் நிதி அடிப்படையிலான கடனுக்கான வட்டியை 0.10% உயர்த்தியது SBI. நாட்டின் முன்னணி வங்கியான SBI, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கடன் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், MCLR கடனுக்கான வட்டியை தற்போது உயர்த்தியுள்ளதால் வீடு, வாகனக் கடன் வாங்கியோரின் மாதத் தவணை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதம் தொடர்பான விவரங்களை SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 15ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு முடியாததாலும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் காரணத்தாலும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 6, 2024 அன்று படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரோட்டா வைரஸ் என்பது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ் ஆகும். இது பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளையே பாதிக்கிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர் சத்து இழப்புக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடும் ஆபத்தை ஏற்படுத்தும். உலகெங்கிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்டோனியா அணி வீரர் சாஹில் சவுகான், சைப்ரஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் சதம் அடித்துள்ளார். மொத்தம் அவர் 41 பந்துகளில் 144* ரன்கள் குவித்தார். இதில் மொத்தம் 18 சிக்சர்களும் அடங்கும். டி20 போட்டியில் இதுவே அதிவேக சதமாகும். அதே நேரம் ஒரு இன்னிங்ஸில் தனி நபர் அடிக்கும் அதிக சிக்ஸர்களும் இதுவாகும்.
Sorry, no posts matched your criteria.