news

News June 18, 2024

பாரத் என்ற பெயரில் என்ன பிரச்னை?: NCERT

image

பாட புத்தகத்தில் இந்தியாவுக்கு பதில் பாரத் என்ற பெயரை பயன்படுத்த NCERT குழு பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், “பாரத், இந்தியா என இரண்டு பெயர்களுமே அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றன. ஆகையால் இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. புத்தகங்களில் எங்கெல்லாம் பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவோம்” என்று NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

ஆரோக்யா பால், தயிர் விலை குறைப்பு

image

ஹட்சன் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் (Full Cream) விலையை லிட்டருக்கு ₹2 குறைத்துள்ளது. கொரோனாவுக்குப் பின் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக தனியார் நிறுவனம் விலையைக் குறைத்துள்ளது. இனி அரை லிட்டர் ஆரோக்யா பால் பாக்கெட் ₹36க்கும் ஒரு லிட்டர் பாக்கெட் ₹68க்கும் விற்கப்படும். ஆரோக்யா தயிர் விலையும் கிலோவுக்கு ₹4 குறைக்கப்பட்டு ₹67ஆக விற்பனையாகிறது.

News June 18, 2024

தர்ஷன் மிகவும் மோசமானவர்: நடிகை ரம்யா

image

கன்னட நடிகர் தர்ஷன் மிகவும் மோசமானவர் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார். ரசிகர் ரேணுகாசாமியை சித்தரவதை செய்து கொலை செய்த வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய ரம்யா, “தர்ஷன் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர். ரவுடிகளை ரசிகர்களாக வைத்திருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

News June 18, 2024

இதை செய்தால் 15 வருடங்களில் கோடீஸ்வரர்!

image

40 வயதில் கோடீஸ்வரராக நிதி ஆலோசகர்கள் சில ஆலோசனை அளித்துள்ளனர். 25 வயதாகும் நபர் மாதம் ரூ.25,000- ரூ.30,000 ஊதியம் ஈட்டுகிறார் எனில், 15:15:15 என்ற மியூச்சுவல் பண்ட் விதிப்படி, மாதம் ரூ.15,000 தொடர்ச்சியாக முதலீடு செய்து, ஆண்டுக்கு 15% வட்டி கிடைத்தால், 40 வயதில் ரூ.1 கோடி கிடைக்கும். எனவே 15% வட்டித் திட்டத்தில் முதலீடு செய்து கோடீஸ்வரராகும்படி நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

News June 18, 2024

பால் சேர்த்த தேனீர் தினமும் அருந்தலாமா?

image

பாலில் கேல்சியம் சத்து இருப்பதால் எலும்பு வலுப்படும். தேயிலையில் caffeine இருப்பதால் சோர்வு நீங்கும். அதேநேரத்தில் இந்த இரண்டும் கலந்து தயாரிக்கப்படும் தேனீர், மசாலா தேனீர் தினமும் அருந்துவது சரியா? என்ற கேள்வி நம்முள் பலருக்கும் எழும். அதற்கு, இந்த வகை தேனீரை தினமும் அருந்தினால், வாயுத் தொல்லை, அஜீரண பிரச்னை, உடல்பருமன், தூக்கமின்மை போன்றவை ஏற்படும் என உடல்நல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

News June 18, 2024

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

image

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்படையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து வாழ்வாதாரம் தேடி மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில், கைது சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளது.

News June 18, 2024

ராகுல், சிவ்ராஜ் சிங்கால் வீணாகும் மக்கள் வரிப்பணம்?

image

ராகுல் காந்தி, சிவ்ராஜ் சிங் செளஹான் ராஜினாமா செய்ததால், வயநாடு, புத்னி தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. மக்கள் வரிப்பணத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தாமல், அரசியல் காரணங்களுக்காக பதவி விலகும் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தலாமா? அரசியலுக்காக பதவி விலகுவோரிடம் பணம் வசூலித்து தேர்தல் நடத்த வாய்ப்பில்லையா? என வாக்காளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

News June 18, 2024

ஆஃப்கானிஸ்தானுக்கு 219 ரன்கள் இலக்கு

image

டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில், முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்கள் எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் குல்பதீன், அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News June 18, 2024

வயநாட்டில் ராகுல் இடத்தை நிரப்புவேன்: பிரியங்கா

image

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், வயநாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவுள்ளதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுல் அத்தொகுதி எம்பியாக இல்லை என்ற உணர்வு மக்களிடையே ஏற்படாத வகையில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், தானும் ராகுலும் வயநாடு மக்களுடன் இருப்போம் என்றார்.

News June 18, 2024

விவசாயிகள் வங்கிக் கணக்கில் ₹2000

image

PM கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் 3 தவணையாக ₹6000 வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3ஆவது முறையாக பதவியேற்றதும், 17ஆவது தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2000 வரவு வைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!