News June 18, 2024
ஆரோக்யா பால், தயிர் விலை குறைப்பு

ஹட்சன் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் (Full Cream) விலையை லிட்டருக்கு ₹2 குறைத்துள்ளது. கொரோனாவுக்குப் பின் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக தனியார் நிறுவனம் விலையைக் குறைத்துள்ளது. இனி அரை லிட்டர் ஆரோக்யா பால் பாக்கெட் ₹36க்கும் ஒரு லிட்டர் பாக்கெட் ₹68க்கும் விற்கப்படும். ஆரோக்யா தயிர் விலையும் கிலோவுக்கு ₹4 குறைக்கப்பட்டு ₹67ஆக விற்பனையாகிறது.
Similar News
News January 16, 2026
பாலமேடு ஜல்லிக்கட்டு.. முதல் பரிசாக ₹8 லட்சத்தில் கார்

கோலாகலமாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் கலந்துகொண்டு, காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல் பரிசாக ₹8 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் 2&3 பரிசாக பைக் ஆகியவை வழங்கப்பட்டன. பரிசு விவரம்: 3-ம் பரிசு நாமக்கல் கார்த்தி (11 காளைகள்), 2-ம் பரிசு பிரபாகரன் (16 காளைகள்), முதல் பரிசு பொந்துகம்பட்டி அஜித் (16 காளைகள்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
News January 16, 2026
சற்றுமுன்: புதிய கட்சிகள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NDA கூட்டணியில் பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டு விரைவில் உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி பங்கீடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தனியார் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார். மேலும், புதிய கட்சிகள் வந்தால் வரவேற்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
உடனடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துக: EPS

கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை மறுத்து, அவர்களை கைது செய்த திமுக அரசுக்கு EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கூலி உயர்வு, மின் கட்டண சலுகை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய கறிக்கோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகளை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களையும், கறிக்கோழி நிறுவனங்களையும் அழைத்து உடனடி முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


