India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராகுல், சரத் பவார், அகிலேஷ் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீதிக்காக போராடி வரும் தான் பல அவமானங்களை சந்தித்ததாகவும், தனது கருத்தை கேட்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றம் குறித்து, தொடர்ந்து பேசி வரும் அவர்கள் தனது கருத்தை கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடு ரோட்டில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் ஸ்பானரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்தபின் பிரேத உடலைப் பார்த்து, “ஏன் எனக்கு இப்படி செய்தாய்?” என்று அந்த கொலையாளி கூச்சலிட்ட சம்பவங்கள் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளன. இளகிய நெஞ்சம் படைத்தோர் இந்த <
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகிய இருவரும் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.
மனிதர்களுக்கு செல்லப் பிராணியான நாய்கள் மீது எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு. இதற்கு பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. பிரபல இந்தி நடிகரான மிதுன் சக்ரவர்த்தி, 116 நாய்களை பராமரிக்கிறார். மும்பை அருகேவுள்ள மத் தீவில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கி ₹45 கோடிக்கு 76 நாய்கள் சுதந்திரமாக வாழ பங்களா கட்டியுள்ளார். அவருக்கு, ஊட்டி பங்களா உள்பட சுமார் ₹400 கோடி மதிப்பு சொத்துக்கள் உள்ளன.
பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைக்க கூடாது என ஜெயலலிதா எடுத்த முடிவிற்கு மாறாக, கூட்டணி வைத்து விட்டோமே என்று வருத்தப்படுவதாக தெரிவித்த அவர், 2026 தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவும் தனித்து போட்டியிடும் என்றார். அதிமுகவை அதிகாரத்தை கொண்டு யாராலும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்தார்.
மே மாதத்துக்கான ரேஷன் பொருள்களை ஜூன் மாத இறுதிவரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு, பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்கு தடையின்றி வழங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம் எழுதியுள்ளது. எம்.பி தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றதால், பாமக மாநில அந்தஸ்தை இழந்தது. இதனால், மாம்பழம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், மீண்டும் தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கோரிக்கை ஏற்கப்படாத பட்சத்தில் சுயேச்சை சின்னத்தில் பாமக போட்டியிட வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி போக்குவரத்து மண்டலங்களில் உள்ள பேருந்துகளை இயக்க ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என்று நாளேடுகளில் விளம்பரம் வெளியாகியிருப்பது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதனை மீறும் வகையில் அரசு விளம்பரம் வெளியாகியுள்ளது.
Sensory Neural Nerve hearing loss என்ற அரிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கியபோது காது கேளாமல் போனதாகவும் சோதனையில் இந்நோய் இருப்பது தெரியவந்ததாகவும் அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவர், தமிழிலிலும் சில பாடல்கள் பாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.