News June 18, 2024

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி முதல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 18, 2026

பெரம்பலூர்: ஆ.ராசாவை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் விசிக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவரும், சிதம்பரம் MP திருமாவளவனை தனியார் தொலைகாட்சியில், திமுக கழகத் துணைப் பொதுச்செயலாளர் ராசா அவதூராக பேசியதை கண்டித்து, பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இன்று (ஜன.18) அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News January 18, 2026

SIR-ல் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி பெயரே மிஸ்ஸிங்!

image

SIR வரைவு வாக்காளர் பட்டியலில் கேரளா தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் விடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டில் அவர் பெங்களூருவில் இருந்ததால் அவர் பெயர் தற்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் சேர்ப்பு முகாமில் தனக்கும், தனது மனைவி & மகனுக்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவர் விண்ணப்பித்துள்ளார்.

News January 18, 2026

திமுக – காங்., ஒருவரை ஒருவர் முடித்துக்கொள்வர்: தமிழிசை

image

திமுக- காங்., இடையே நம்பிக்கையில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அவர்களிடையே கூட்டணி தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை என்ற அவர், 1967-ல் காங்கிரஸை திமுக முடித்தது; இப்போது ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அநீதியும் முடிந்துபோகும், மிகவும் மோசமான ஆட்சியும் முடிந்துபோகும். 2026 NDA கூட்டணிக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!