India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வு வினாத்தாள் கசியும் மையமாக, பாஜக ஆளும் மாநிலங்கள் மாறிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல், 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வழக்கம் போல பிரதமர் மோடி மெளனம் சாதிப்பதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் சர்க்கரைப் பொங்கல் வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளித்திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிலையில், 1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 8 போட்டிகள் சவால் நிறைந்ததாக இருக்கும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கு பின்னர் 3-4 நாளில் 2 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவித்த அவர், எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்றார். இந்திய அணி 20ஆம் தேதி ஆப்கனையும், 22இல் வங்கதேசத்தையும், 24இல் ஆஸி., அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.
இசைக் கலைஞர்களுக்கு நடைமுறையில் உள்ள பேருந்து சலுகைகளை தொய்வின்றி வழங்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாக பயணிக்கும் போது 50% கட்டணச் சலுகை வழங்குமாறும், இசைக் கருவிகளை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சிவகங்கையில் இசைக்கருவியுடன் பயணிக்க அனுமதி மறுத்தது சர்ச்சையான நிலையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆதார்-பான் எண்களை இணைக்கும்படி மக்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை யார் உதவியும் இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம். <
எம்ஜிஆர் போல திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நடிகர் விஜய் நினைக்கிறார் என்று செல்லூர் ராஜூ பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது எனக் கூறிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் என தெரிவித்தார். தவெக – நாதக கூட்டணி அமைக்க முயற்சி நடந்து வரும் நிலையில், செல்லூர் ராஜூ மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தண்டவாளங்களை கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு வனவிலங்குகள், கால்நடைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு தீர்வாக, தஞ்சாவூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவன் சாம் ஜபர்சன், புதிய தானியங்கி கருவியை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த கருவி, அபாய ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டும் அல்லது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவற்றை அப்புறப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் என்சிபியில் உள்ள 19 எம்எல்ஏக்கள் மழைக்காலக் கூட்டத் தொடருக்கு பின் சரத் பவார் அணிக்கு மாற உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ.வும் சரத் பவாரின் பேரனுமான ரோஹித் பவார் கூறியுள்ளார். கடந்தாண்டு ஜூலையில் கட்சி பிளவுபட்டபோது, அஜித் பவாருடன் 40 எம்எல்ஏக்கள் சென்றனர். வரும் அக்டோபரில் அங்கு தேர்தல் வர உள்ள நிலையில், மீண்டும் அணி மாறும் படலம் இருக்கும் என கூறப்படுகிறது.
அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க நீதிபதி சந்துரு குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதில், மாணவர்களின் வருகை பதிவேட்டில் சாதிப் பெயர் இடம்பெறக்கூடாது, வகுப்பறைகளில் மாணவர்களை பெயர் வரிசைப்படி மட்டுமே அமர வைக்க வேண்டும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அதே சமூகத்தினரை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அவர் வழங்கியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 50 வயதான விகாஷ் மங்கோத்ரா என்பவர் நீட் யுஜி 2024 தேர்வு எழுதி பாஸ் ஆகியுள்ளார். அவரின் மகள் மீம்மன்சானாவும், நொய்டா மையத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியாகியுள்ளார். இதுபோல தந்தையும், மகளும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சியாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. மகளை ஊக்கப்படுத்தவே தேர்வெழுதியதாக அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.