India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாதக சார்பாக போட்டியிடும் அபிநயா, 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 10 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அன்று காலை 8 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஒன்றுகூட வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான ஓராண்டு பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். மாதம் ₹4000 உதவித் தொகை, உணவு, உடை, தங்குமிடம் இலவசம். விவரங்களுக்கு அறநிலையத்துறை இணையதளத்தை காணலாம்.
பிஹாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு மாணவருக்கு ₹30 லட்சம் வரை பணம் கைமாறியது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கைதான மாணவர்கள் சில பாடங்களில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்றதும், தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக வினாத்தாள் கிடைத்ததால், அதில் உள்ளதை மட்டும் படித்து தேர்வு எழுதியதும் அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவியை, திமுக அரசு முடக்க நினைப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் 30 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள், தற்போது 10 லட்சமாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பராமரிப்பின்மை, சேவை குறைபாடு, செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு ஆகியவை இதற்கு காரணம் எனக் கூறியுள்ளார். இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழைகள் டிவி பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ‘கலைச்செம்மல்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதைக் கடந்த மரபுவழி கலை வல்லுநர்கள், நவீனபாணி கலை வல்லுநர்கள், சிற்பக் கலைஞர்கள் போன்றோர், நுண்கலைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. ஜூலை 1க்குள் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், 2ம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை–08 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கஸ்டம்ஸ் அதிகாரிகள் போலப் பேசி மோடி செய்வோரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு, CBIC எச்சரித்துள்ளது. சமீப நாள்களாக, செல்போன் வழியாகத் தொடர்புகொள்ளும் மோசடி நபர்கள், தாங்கள் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக மிரட்டி மக்களிடம் பணம் பறித்து வருகின்றனர். அதுபோன்ற அழைப்புகள் வந்தால், www.cybercrime.gov.in என்ற இணையதளம் அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என CBIC தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ முடங்கியதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஜியோ மொபைல் இணைய சேவை மட்டுமன்றி, ஃபைபர் வழி சேவையும் மொத்தமாக முடங்கியது. இதனால் பொதுவான இணைய பயன்பாடுகள் மட்டுமன்றி, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் அதிகப்படியான புகார்கள் பதிவாகியுள்ளது.
கேரளா வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகத்தில் அளித்திருந்தார். இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் ரேபரேலி தொகுதி எம்பியாக தொடர்கிறார்.
அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். குழந்தையின்மை பிரச்னையை போக்க, ஆயிரக்கணக்கான தம்பதிகள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் அந்த வசதி செய்துதரப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அதிகம் கொதிக்க வைத்த ’டீ’யை பருகுவது, உடல் நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவிலுள்ள மனிதர்களின் அன்றாட வாழ்வில், ‘டீ’ என்பது இன்றியமையாத ஒரு புத்துணர்ச்சி பானம். இந்த நிலையில், மிதமாக கொதிக்க வைத்த டீயை பருகுவது நன்மை பயக்கும் எனக் கூறியுள்ள நிபுணர்கள், அளவுக்கு அதிகமாக சுட வைத்து குடிக்கும் ‘டீ’ ஸ்லோ பாய்சனுக்கு சமம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.