News June 18, 2024
வரும் 20ஆம் தேதி நாதக வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாதக சார்பாக போட்டியிடும் அபிநயா, 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 10 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். விழுப்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அன்று காலை 8 மணியளவில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே ஒன்றுகூட வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 24, 2026
பாடகி ஜானகியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு விளக்கம்

மகன் <<18931928>>முரளி கிருஷ்ணா<<>> இறந்த துக்கத்தில் பாடகி எஸ்.ஜானகி மறைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ள ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா, குடும்பத்தினர், நண்பர்களின் அரவணைப்பில் எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 17 நாள்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே <<18942504>>சிறப்பு மதிப்பெண்கள்<<>> மூலம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என CM ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.
News January 24, 2026
3-வது பிரசவத்துக்கு சம்பளத்துடன் விடுமுறை

பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இனி, இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.


