India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல்
▶அதிகாரம்: தூது ▶ குறள் எண்: 682
▶குறள்:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
▶பொருள்: அன்பு, அறிஞரைப் போன்ற அறிவு, அரசினர் பாராட்டக்கூடிய அளவுக்கு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகிய மூன்றும் தூது செல்பவருக்குத் தேவைப்படும் முக்கியமான பண்புகளாகும்.
கணினி & மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்களை தயாரிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA உலகின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை எட்டியுள்ளது. NVIDIA இன் சந்தை மூலதனம் $3.327 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் & ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் 2 &3ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீருக்கு போட்டியாக தமிழகத்தைச் சேர்ந்த W.V.ராமன் களமிறங்கியுள்ளார். கம்பீர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் பயிற்சியாளரான ராமனை BCCIஇன் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்முகத் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவர் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘கொல்லாதே’ பாடலின் ப்ரமோ வைரலான நிலையில், இன்று (ஜூன் 19) ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் செப்., 27ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.
இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை NHRCI முடித்து வைத்திருந்தது. அதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேகதாது அணை தொடர்பாக மத்திய இணையமைச்சர் சோமண்ணா பேசியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எல்.முருகன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் வழியே தீர்வு கண்டு மேகதாது அணை கட்டப்படும் என சோமண்ணா கூறியிருந்தார். இதனை ஒரு தமிழனாக எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முருகன், “சோமண்ணா என்ன கூறினார் என்றே எனக்கு தெரியாது” எனக் கூறினார்.
இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாவோ நுர்மி தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். பின்லாந்தில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 85.97 மீ., தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் (26) முதலிடம் பிடித்து, தங்கத்தைக் கைப்பற்றினார். டோனி, ஆலிவர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
இன்று (ஜூன் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.