News June 19, 2024
கவுதம் கம்பீருக்கு போட்டியாக களமிறங்கிய ராமன்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீருக்கு போட்டியாக தமிழகத்தைச் சேர்ந்த W.V.ராமன் களமிறங்கியுள்ளார். கம்பீர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் பயிற்சியாளரான ராமனை BCCIஇன் கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்முகத் தேர்வு செய்து இருக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அவர் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 14, 2026
பெரம்பலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News January 14, 2026
வா வாத்தியார்- எம்ஜிஆரா? நம்பியாரா? Review & Rating

✦தாத்தா ராஜ்கிரணால் எம்ஜிஆராக வளர்க்கப்படும் கார்த்தி, நம்பியாராக மாறி, மீண்டும் எப்படி எம்ஜிஆராகிறார் என்பதே ‘வா வாத்தியார்’ ✦பிளஸ்: கார்த்தி ஒன் மேன் ஷோ இந்த படம். பட்டையை கிளப்பியுள்ளார். ராஜ்கிரண் உள்பட மற்ற நடிகர்கள் கச்சிதம். இயக்குநர் நலனின் ஒன்லைன் காமெடியும், திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது. கேமரா, இசை அற்புதம் ✦பல்ப்ஸ்: 2-ம் பாதியின் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. Rating: 2.5/5.
News January 14, 2026
சற்றுமுன்: 38 பேர் பலி.. பெரும் துயரம்

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாலியில் உள்ள நைஜர் நதி நகரத்தில் இருந்து, இரவு நெல் அறுவடை செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏற்றிக் கொண்டு சென்ற படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.


