news

News June 19, 2024

பூர்வஜென்ம வினை நீக்கும் திவ்யப் பிரதோஷம்

image

துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வரும் பிரதோஷத்தை திவ்யப் பிரதோஷம் என சைவக்குரவர்கள் போற்றுகின்றனர். சிறப்பு வாய்ந்த இப்பிரதோஷ நாளான இன்று காலையிலேயே குளித்து, திருநீறு இட்டு, ஈசனுக்கு விரதமிருந்து, திருப்போரூர் ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, வில்வ மாலை சாற்றி, திருவாசகம் பாடி, 16 தீபமேற்றி வணங்கினால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

News June 19, 2024

நீட் தேர்வு: தமிழகத்தை பின்பற்ற கர்நாடகா அரசு முடிவு?

image

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் வழிமுறையை கர்நாடகாவில் பின்பற்ற ஆலோசித்து வருவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். நீட் தகுதி தேர்வால்
கர்நாடக மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இவ்வாண்டு அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது என்றார். அத்துடன், நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமானது என்று தெரிவித்தார்.

News June 19, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கத்திற்கு ஆதரவு தருகிறோம் – DK சிவகுமார்
*மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – கனிமொழி
*அர்ஜென்டினாவில் லித்தியம் இருப்பு குறித்து கோல் இந்தியா ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
*T20 WC சூப்பர் 8 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் SA – USA அணிகள் இன்று மோதவுள்ளன.
*ரஃபா நகரில் 50% ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் – இஸ்ரேல்

News June 19, 2024

நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்

image

✍வரலாற்றைப் படைப்பது மன்னர்களும் தளபதிகளும் அல்ல; மாறாக வெகுஜன மக்களே. ✍எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி; அதை நாமே வழிநடத்துவதுதான். ✍திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட ஒரு பொய் உண்மையாகிறது. ✍ஞானிகள் அமைதியாக இருக்கும்போது, முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். ✍பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது. ✍தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதியைவிட கொடுமையானதாகும்.

News June 19, 2024

நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம்:செல்வப்பெருந்தகை

image

நீட் தேர்வு என்பது வணிக வியாபாரமாகி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். பணம் செலவு செய்து, பயிற்சி மையத்தில் சேர முடியாத பல மாணவர்களின் கல்விபெறும் வாய்ப்பை நீட் தேர்வு பறிக்கிறது எனக் கூறிய அவர், சமூக நீதியை காக்க நீட் ஒழியும் வரை போராடுவோம் என்றார். நீட் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.

News June 19, 2024

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 அரை மணியளவில் இடி – மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு 11 மணி தாண்டியும் பெய்தது. இதனால் எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சோழிங்கநல்லூர், என நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

News June 19, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 19 | ▶ஆனி – 05
▶கிழமை: புதன் | ▶திதி: திரயோதசி
▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶எமகண்டம்: காலை 07:30 – 09:00 வரை
▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை
▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News June 19, 2024

தேர்தல் அதிகாரியிடம் பாமக முறையீடு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்க வேண்டுமென்றால், அங்கு முகாமிட்டுள்ள 9 அமைச்சர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் பாமகவின் தேர்தல் பணி பொறுப்பாளர் பாலு அளித்த மனுவில், எக்காரணத்தைக் கொண்டும் தேர்தல் ஆணையம் அமைச்சர்கள் தங்கி பணியாற்றுவதை அனுமதிக்க கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 19, 2024

மண முறிவு குறித்து பேசிய ரேணு தேசாய்

image

ஆந்திராவின் துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் ரசிகர்களுக்கு அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாய் காட்டமாக பதிலளித்துள்ளார். மண முறிவு பெற்றிருக்கக் கூடாது என்ற தொனியில் ரேணு தேசாய்க்கு பலர் அறிவுரை கூறி வருகின்றனர். இதனால் பொறுமை இழந்த அவர் தனது சமூக வலைத்தளத்தில், “பவன் கல்யாணை விட்டு நான் விலகவில்லை. அவர்தான் என்னை விட்டு விட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார்” எனக் கூறியுள்ளார்.

News June 19, 2024

USA Vs SA: இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்?

image

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்கவுள்ளது. இன்றைய போட்டியில், USA & SA அணிகள் மோதுகின்றன. விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், வெல்ல WI அணிக்கு 85% வாய்ப்பும், USA அணிக்கு 15% வாய்ப்பும் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத WI அணி (+3.257) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைக்க, இந்த ஆட்டத்தை வெல்ல உறுதியாகப் போராடும்.

error: Content is protected !!