India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்கி, 9 நாள்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளான நாளை மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தியதும் அவை ஒத்திவைக்கப்படும். நாளை மறுநாள் காலை கேள்வி நேரத்துடன் அலுவல் தொடங்கவுள்ளது. தேர்தலுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும். இதில், காவேரி விவகாரம், சட்டம் ஒழுங்கு விவகாரம் எதிரொலிக்கும் எனக் கூறப்படுகிறது.
நடிகை ரஷ்மிகா பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய பின் அதிக கவர்ச்சி காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது குறித்து பேசிய அவர், “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமானியர்கள் போலத்தான் வாழ வேண்டும். அதுபோல, பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிதான் நானும் இருக்கிறேன். அதேநேரம், எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீற மாட்டேன்” என்றார்.
அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் காரணமாக கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமடைந்து, இறந்தார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் அவர் துப்பாக்கியால் தன்னே தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்டெபன் அவக்யன் நினைவு செஸ் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், 10 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஆர்மீனியாவில் நடந்த இறுதிச்சுற்றில் டிரா செய்த அர்ஜுன், 6.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். உலகத் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள அவர், இந்த வெற்றியின் மூலம், லைவ் ரேட்டிங்கில் 2,778 புள்ளிகளை உறுதி செய்துள்ளார்.
சென்னையில் சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. இரவில் சென்னைக்கு வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. கோழிக்கோட்டில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கும், டெல்லியில் இருந்த வந்த விமானம் பெங்களூருக்கும் திருப்பி விடப்பட்டன.
மோடி 3.0 அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் அடுத்த 5 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன. மேலும், இந்த ஆண்டு நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அதற்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் சேர்க்கப்படவுள்ளது. இன்னும் சில தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ₹40ஆக இருந்த முருங்கைக்காய் நாளுக்கு நாள் விலை அதிகரித்து தற்போது ₹100க்கு விற்பனையாகிறது. கோடை மழை காரணமாக முருங்கை செடியில் இருந்த பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்துவிட்டன. இதனால், விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து முற்றிலும் குறைந்தது. அத்துடன், தேவை அதிகரித்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
“சதுர்நாட்கொருக்கால் நெய் முழுக்கைத் தவிரோம்” என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 4 நாளுக்கு ஒருமுறை எண்ணெய்க் குளியல் அவசியம், ஆண்கள் எனில் புதன், சனிக்கிழமை, பெண்கள் எனில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அக்குளியல் மேற்கொள்வது நல்லது என்றும், அதுவும் சூடான நீரிலேயே எண்ணெய் நீராட வேண்டும், இப்படி மேற்கொண்டால் உடல் சூடு, கண் பிரச்னை சீராகும் என சித்த மருத்துவம் தெரிவிக்கிறது.
தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று கமலாலயத்தில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. படுதோல்வியடைந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.
காலையில் தூங்கி எழுந்து, கண் விழிக்கும்போது நம்முடைய முகத்தை கண்ணாடியிலும், உள்ளங்கையையும் பார்ப்பது அதிர்ஷ்டத்தை தரும். தெய்வீக படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பதும் நல்ல நேர்மறை சிந்தனையை உருவாக்கும். மகாலட்சுமியின் உருவம் அல்லது மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரை படத்தை பார்த்தால் அன்று வருமானம் அதிகரிக்கும். காலையில் விளக்கு எரிவதை பார்த்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.