News June 19, 2024
சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. இரவில் சென்னைக்கு வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. கோழிக்கோட்டில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கும், டெல்லியில் இருந்த வந்த விமானம் பெங்களூருக்கும் திருப்பி விடப்பட்டன.
Similar News
News January 21, 2026
DMK கூட்டணியில் தமிமுன் அன்சாரி

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த மனிதநேய ஜனநாயக கட்சி (MJK), 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இணையவுள்ளது. MJK தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த தேர்தல் பணியாளர்கள் கூட்டத்தில், வடமேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய உறுதி ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிமுன் அன்சாரிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
News January 21, 2026
நகைக் கடன்.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்!

பிப்.1-ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் வரலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நகைக் கடன் வழங்கும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்கு கிடைப்பது போல் Priority Sector Lending போன்ற ஆதரவுகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், நகைக் கடனுக்காக பணத்தை திரட்டும் செலவு குறையும். இதனால், மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன்கள் வழங்க முடியும்.
News January 21, 2026
திமுகவை வீட்டுக்கு அனுப்ப TTV வருகை: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் நயினாருக்கு எதிராக கருத்து கூறி வந்த TTV, அண்ணாமலையுடன் நட்பை தொடர்ந்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில், இன்று அமமுக, NDA கூட்டணியில் இணைந்துவிட்டது. இந்நிலையில், NDA கூட்டணியில் இணைந்த TTV-யின் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறி அண்ணாமலை வரவேற்றுள்ளார்.


