news

News June 19, 2024

யார் நினைத்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: தமிழிசை

image

நீட் தேர்வை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், சில குளறுபடிகள் நடந்ததன் காரணமாக, அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும் எனக் கூறுவது தவறானது என்றார். மேலும், யார் நினைத்தாலும் நீட் தேர்வை தவிர்க்க முடியாது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

News June 19, 2024

கள்ளச்சாராயம்: 26 பேருக்கு சிகிச்சை

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 26 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, 4 பேர் உயிரிழந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்த 4 பேர் ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவரும் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 19, 2024

அடுத்த 10 ஆண்டுகளில் ₹8,340 கோடி முதலீடு: அதானி

image

ஆற்றல் மற்றும் டிஜிட்டல் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அளவிலும், உலகளவிலும் இவ்விரு துறைகளிலும் ட்ரில்லியன் டாலர் வாய்ப்புகள் இருப்பதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் $100 பில்லியன் முதலீடு செய்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு தேவையான அனைத்து தயாரிப்புகளையும் உருவாக்கவுள்ளதாகவும் கூறினார்.

News June 19, 2024

ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் அவகாசம் கிடையாது: அமைச்சர்

image

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை மறுபதிவு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி செய்தி ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், 5 மாதங்களுக்கு முன்பே ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்துவிட்டதாகவும், இருமுறை தமிழகத்தில் பதிவு செய்யும் நடைமுறையை தாமதப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

News June 19, 2024

செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு

image

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40ஆவது முறையாக ஜூன் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ED வழக்கு மீதான தீர்ப்பை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் புதிதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News June 19, 2024

வணிக வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்துகிறது டாடா

image

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற ஜூலை 1 முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களான பேருந்து, லாரிகளின் விலையை 2% வரை உயர்த்தியுள்ளது. அந்த வாகன மாடல்களுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும் என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி செலவின அதிகரிப்பால் வணிக பயன்பாடு வாகன விலையை டாடா உயர்த்தியது. அதையடுத்து மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது.

News June 19, 2024

22, 23ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 22, 23ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 22ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும், 23ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News June 19, 2024

இபிஎஸ் வழக்கை துரிதப்படுத்த சொன்னாரா டிடிவி?

image

டெல்லியில் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு டிடிவி தினகரன் சென்றிருந்தார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை டிடிவி தினகரன் சந்தித்து பேசியதாகவும், அப்போது இபிஎஸ்க்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகார், அவரது உறவினருக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

News June 19, 2024

கள்ளச்சாராயம் விவகாரத்தில் திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

image

கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் ஏற்கெனவே கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்ததாகக் கூறிய அவர், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத திமுகவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும், அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News June 19, 2024

வெப்ப அலை காரணமாக 550 பேர் பலி

image

சவூதி அரேபியாவில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டவர்களில், 550 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வெப்ப அலை தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!