News June 19, 2024

வணிக வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்துகிறது டாடா

image

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருகிற ஜூலை 1 முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களான பேருந்து, லாரிகளின் விலையை 2% வரை உயர்த்தியுள்ளது. அந்த வாகன மாடல்களுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும் என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி செலவின அதிகரிப்பால் வணிக பயன்பாடு வாகன விலையை டாடா உயர்த்தியது. அதையடுத்து மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது.

Similar News

News January 21, 2026

கோவை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> -1 <<>>என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 21, 2026

DMK கூட்டணியில் தமிமுன் அன்சாரி

image

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த மனிதநேய ஜனநாயக கட்சி (MJK), 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இணையவுள்ளது. MJK தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடந்த தேர்தல் பணியாளர்கள் கூட்டத்தில், வடமேற்கு மண்டலத்தில் 32 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய உறுதி ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிமுன் அன்சாரிக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

News January 21, 2026

நகைக் கடன்.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்!

image

பிப்.1-ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் வரலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நகைக் கடன் வழங்கும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்கு கிடைப்பது போல் Priority Sector Lending போன்ற ஆதரவுகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், நகைக் கடனுக்காக பணத்தை திரட்டும் செலவு குறையும். இதனால், மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன்கள் வழங்க முடியும்.

error: Content is protected !!