India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நேற்று ₹54,400க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத் தங்கம், இன்று ₹240 குறைந்து ₹54,160க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,800ஆக இருந்த ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ₹30 குறைந்து ₹6,770க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ₹99க்கு விற்கப்படுகிறது. தங்கம் வாங்குவதை சீன மத்திய வங்கி நிறுத்தியதே விலை குறைவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, இந்தியா- ரஷ்யா இடையிலான வருடாந்தர உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா சென்றுள்ளார். அதிபர் புடின் அளித்த விருந்தில் பங்கேற்ற பின் அவருடன் பேசிய மோடி, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை உள்ளிட்ட ஐநா சாசனத்துக்கு மதிப்பளிக்க வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும் போர்க்களத்தில் தீர்வுகள் உருவாகாது என்றும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியும் என்றும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனில் நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இரவு 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது. காலிறுதியில் தகுதி பெற்ற ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதவுள்ளன. இரு பெரும் அணிகள் மோதுவதால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அரசு முறைப் பயணமாக 2 நாள்கள் ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடுகளோ ரஷ்யாவுடன் தொடர்பு கொள்ளும்போது, ஐநா சாசனம், உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா மதிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. காலை நேரம் விபத்து நடந்ததால், தொழிலாளர்கள் பலர் ஆலையின் உள்ளே இல்லை எனத் தெரிகிறது.
உலகக்கோப்பை வெற்றியின் போது கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு 2.16 கோடி லைக்ஸ்களை பெற்றுள்ளது. தென்கொரிய BTS இசைக்குழு பாடகர் கிம் தயேயுங் பதிவு 2.10 கோடி லைக்ஸ்களை பெற்று முதலிடத்தில் இருந்த நிலையில், கோலியின் பதிவு ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளது. பாலிவுட் திரையுலக தம்பதி சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி திருமண புகைப்படங்கள்1.60 கோடி லைக்ஸ்களை பெற்று இந்திய அளவில் 2ஆம் இடத்தில் உள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 10 வயது சிறுவனை தெருநாய் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் கௌரிநாத், நண்பர்களுடன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது நாய் தாக்கியுள்ளது. சிறுவனின் கூச்சலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி விட்டனர். தெருநாய் தாக்கியதில் சிறுவனின் தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இளைஞர்களும் சிறுவர்களும் புகைபிடிக்கும் பழக்கத்தை வீட்டிலிருக்கும் பெரியோரிடம் இருந்தே கற்றுக் கொள்வதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. HCATC அமைப்பு நடத்திய ஆய்வில், புகைபிடிப்போர் இக்காரணத்தை தெரிவித்துள்ளனர். எனவே, வீட்டிலுள்ள பெரியவர்கள் புகைபிடிப்பதை நிறுத்தினாலே புகைபழக்கம் பெரிய அளவில் கட்டுக்குள் வரும் என்று தெரிகிறது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் மற்றும் கோலிக்கு ஓய்வு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியை வழிநடத்துவதில் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவுகிறது. ஐபிஎல்லில் ஹர்திக்கின் தலைமைப் பண்பு கேள்விக்குறியான நிலையில், ஆஸி.-க்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டனாக ராகுல் சிறப்பாகவே செயல்பட்டதால் போட்டி கடுமையாகியுள்ளது.
ஒடிஷாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பாஜகவிடம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதன் எதிரொலியாக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை கூண்டோடு மாற்ற அவர் உத்தரவிட்டுள்ளார். ஒடிஷாவில் 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இக்கட்சி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.