News July 9, 2024
ஆசிய சாதனை படைத்த கோலியின் பதிவு

உலகக்கோப்பை வெற்றியின் போது கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு 2.16 கோடி லைக்ஸ்களை பெற்றுள்ளது. தென்கொரிய BTS இசைக்குழு பாடகர் கிம் தயேயுங் பதிவு 2.10 கோடி லைக்ஸ்களை பெற்று முதலிடத்தில் இருந்த நிலையில், கோலியின் பதிவு ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளது. பாலிவுட் திரையுலக தம்பதி சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி திருமண புகைப்படங்கள்1.60 கோடி லைக்ஸ்களை பெற்று இந்திய அளவில் 2ஆம் இடத்தில் உள்ளது.
Similar News
News July 8, 2025
14 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்த டிரம்ப்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் ஆக.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியாவுக்கு 26% வரியும், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, துனிசியா, கஜகஸ்தானுக்கு தலா 25% வரியும் விதிக்கப்பட்டுள்ளது, லாவோஸ் – 40, மியான்மர் – 40%, தென் ஆப்ரிக்கா – 30%, இந்தோனேசியா – 32%, கம்போடியா – 36%, செர்பியா – 35%, வங்கதேசம் – 35% இனி இறக்குமதி வரியாகும்.
News July 8, 2025
நயினார்னு யாரையும் தெரியாதே.. TN BJP பரிதாபங்கள்

வடசேரியில் இருக்கும் கிளைச் செயலாளருக்கு போன் செய்தபோது, தன்னை யாரென்றே தெரியாது என்று எதிர்முனையில் பேசியவர் கூறியதாக நயினார் நாகேந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், நயினார் என்பதை ‘நைனாவா?’ எனக் கேட்பதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக பாஜக ஆலோசனை மேடையிலேயே போட்டுடைத்த நாகேந்திரனின் குமுறலை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
News July 8, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் பகவானை, இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். திருமணம், சொந்த வீடு கனவு போன்றவை கைகூடும் என்பது ஐதீகம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்.
அர்த்தம்: வீரக் கொடியைக் கொண்டவரும், விக்னங்களைத் தீர்க்கும் கையை உடையவருமான செவ்வாய் பகவானை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களை ஆசீர்வதிப்பாராக!