India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த குற்றச் செய்திகளை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் இளைஞர் வெட்டிப்படுகொலை. தேனியில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று திரும்பியவர் மீது கொலை முயற்சி” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், அரசை வலியுறுத்தி இனி எந்த பயனும் இல்லை என்றும் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெங்களூருவில் ’ஒன்8 கம்யூன்’ என்ற பெயரில் பார் (Pub) நடத்தி வருகிறார். நேற்றிரவு அங்கு 1.30 மணி வரை பார்ட்டி நடைபெற்றதாகக் கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அதிக ஒலி எழுப்பி அக்கம் பக்கத்தினரை தொந்தரவு செய்ததாகவும் FIRஇல் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூருவில் இரவு 1 மணி வரை மட்டுமே பார் நடத்த அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் முழு பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள ரூ.20 கோடி மதிப்பில் 4 கவச கார்களை மத்திய அரசு வாங்கியுள்ளது. குண்டு துளைக்காத மற்றும் வெடிகுண்டு தாக்குதலை தாங்க வல்ல இந்த 4 கார்களும் மும்பை துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும், அதற்கு வரி விலக்கு பெறும் வெளியுறவுத்துறையின் கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தோல்விக்கு முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகளே காரணம் என பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரங்கசாமி பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டிய அவர்கள், அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதில் பிடிவாதமாகவும் உள்ளனர். இவர்களுடன் சுயேச்சை எம்.எல்.ஏக்களும் இணைந்துள்ளனர்.
சிவகாசி அடுத்த காளையார்குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, படுகாயமடைந்த 2 பெண் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில், அப்பு கதாபாத்திரத்திற்காக தன்னை ஒரு பெட்டியில் பாதியளவு புதைத்து விட்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இடுப்பின் கீழ் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் முதுகின் நடுப்பகுதியில் இருந்து செட் செய்ததால் நடக்க சரியாக இருந்ததாகவும் மேலும், இயக்குநர் சங்கீதம் சீனிவாச ராவ் படத்தை கையாண்ட விதம் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார். ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இறுதி அஞ்சலி நடந்தது. இச்சம்பவத்தால் தேசிய அளவில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல் கூற உள்ளார்.
பணவீக்கம் காரணமாக இந்திய வீடுகளில் சமையல் செலவு 10% உயர்ந்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. காய்கறிகளின் விலையேற்றத்தால், நடுத்தர குடும்பங்களில் பல காய்கறிகள் கொண்டு சமைக்கப்படும் சாம்பார் போன்ற உணவுகளை சமைப்பது குறைந்துள்ளது. உணவகங்களில் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ், சாலட்டில் வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காய் பயன்படுத்துவதாகவும் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியன், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இது ஈரானின் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் வேரூன்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் படையெடுப்பை தடுக்க உருவான ஹிஸ்புல்லா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஓமனின் ஹூதி அமைப்புகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
கிட்னி தானம் செய்தால் 30 லட்ச ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய நூதன மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குண்டூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், கிட்னியை தானம் செய்தால் ₹30 லட்சம் தருவதாக மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக் மூலம் கூறியிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்தபின், 7 மாதமாக இழுத்தடித்து வெறும் ₹50,000 கொடுத்து ஏமாற்றிவிட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.