news

News August 17, 2024

26/11 தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்!

image

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாக்., பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 166 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான 26/11 தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த அவரை அமெரிக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். இந்த நிலையில், அவரை Extradition Treaty-படி, இந்தியா அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

News August 17, 2024

புதிய லுக்கில் அசத்தும் பிரபாஸ் – ரோஹித்

image

பான் இந்திய நடிகர் பிரபாஸ் & இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோரது புதிய லுக், இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹனு ராகவபுடியின் புதிய படத்தின் தொடக்க விழாவில், குட்டை தாடி, நெற்றியில் பொட்டுடன் பிரபாஸ் அழகாக இருப்பதாக ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். அதேபோல, ஸ்டைலிஷான ரோஹித் ஷர்மாவின் புதிய தோற்றப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News August 17, 2024

களத்தில் இருந்து ஒதுங்கிய மகன்; போட்டுயிடும் தந்தை

image

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தான் போட்டுயிட உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உமர் அப்துல்லா முடிவெடுத்துள்ள நிலையில், தேசிய மாநாடு கட்சியை வழிநடத்த அவர் முடிவெடுத்துள்ளார். காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் செப்.18 முதல் அக்.1 வரை நடைபெறவுள்ளது.

News August 17, 2024

இங்கெல்லாம் கனமழை கொட்டித்தீர்க்கும்

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூரில் மழை பெய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. நாளை தென்காசி, நெல்லை, குமரியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

News August 17, 2024

சாதியை ஒழிக்க முடியாது: திருமா வேதனை

image

மனிதர்களிடையே பிறப்பால் ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கும் சாதியை ஒழிக்க முடியுமா என கேட்டால், இல்லை என்றுதான் பதில் வருமென, விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் கூறினார். இருப்பினும், சாதியை ஒழிப்பதற்கான களப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டே தீர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சிந்தனையாளர்கள் அம்பேத்கர், பெரியார் போல பல இளைஞர்கள் சமூக பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.

News August 17, 2024

ODI கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் யார்?

image

ODI கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதலில் யார் சதமடித்தது என்பது தெரியுமா என்றால் கேள்விக்குறியே. அந்தப் பெருமை உலக கோப்பையை வென்று தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ்வையே சேரும். 1983 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன்கள் ( 138 பந்துகள்) குவித்ததே முதல் சதமாகும். அதுவும் இந்தியாவின் 45ஆவது போட்டியில் அதை பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அமர்நாத் 1933இல் முதல் சதமடித்தார்.

News August 17, 2024

“ஜெயிலில் கூட போடுங்க.. மனைவியிடம் வேண்டாம்”

image

பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் விபின் குப்தா (34) என்பவர் திடீரென மாயமானார். இதையடுத்து, விபின் குப்தாவை போலீஸார் நொய்டாவில் கண்டுபிடித்தனர். விசாரணையில், தன்னை யாரும் கடத்தவில்லை எனக் கூறிய அவர், மனைவியின் டார்ச்சரால்தான் ஓடியதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னை ஜெயிலில் போடுமாறு மன்றாடிய அவர், தயவுசெய்து மனைவியிடம் மட்டும் மீண்டும் அனுப்பிறாதீங்க எனக் கெஞ்சினார்.

News August 17, 2024

ஆக.22இல் தவெக கொடி அறிமுகம்?

image

வரும் 22ம் தேதி விஜய் தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்ய இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. தவெக முதல் மாநாடு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டு வரும் நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்கூட்டியே கொடியை அவர் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. அந்த கொடியில், 2 வண்ண நிறங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகை என்றால் வெற்றி என்பது அர்த்தமாகும்.

News August 17, 2024

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

image

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News August 17, 2024

ஜெர்சியை மாற்றிக்கொண்ட நட்சத்திரங்கள்!

image

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் & ஒலிம்பிக்ஸ் பதக்க மங்கை மனு பாகர் தங்களது கையெழுத்திட்ட ஜெர்சியை பரிமாறிக்கொண்டனர். ஒலிம்பிக்ஸில் இந்திய அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து கொண்டனர். அப்போது தோழமையை பாராட்டும் வகையில், மனுவுக்கு கைஃப் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

error: Content is protected !!