news

News August 19, 2024

இதுவும் தீவிரவாதம் தான்!

image

காஷ்மீர் தொடங்கி குமரி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. குழந்தை, மாணவி, மூதாட்டி என வயது வேறுபாடின்றி பாலியல் சீண்டல், வன்முறை, படுகொலை என சொல்லொணா துயரத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கொடூர குற்றங்களை அரங்கேற்றும் மனிதகுல விரோதிகளை, தீவிரவாதிகளைப் போலவே நடத்த சட்டம் கடுமையாக்கப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

News August 19, 2024

அதிர்ஷ்டம் கொட்டட்டும்: மோடி வாழ்த்து

image

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் இருப்பதாக கூறிய அவர், இந்த புனித பண்டிகை உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.

News August 19, 2024

யூடியூபில் லட்சங்களில் சம்பாதிக்கும் லாரி டிரைவர்

image

ஜார்கண்ட்டில் லாரி டிரைவர் ஒருவர் youtubeல் மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 20 ஆண்டுகளாக லாரி டிரைவராக இருக்கும் ராஜேஷ் ரவானி, பயணத்தின்போது தான் சமைப்பதை youtubeல் பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் புகழ் பெற்ற அவரது சேனலை (R Rajesh Vlogs) 1.86M பேர் பின்தொடர்கின்றனர். டிரைவராக மாதம் ₹25K சம்பாதித்த அவர், தற்போது யூடியூபில் ₹5L வரை சம்பாதிக்கிறார்.

News August 19, 2024

720/720 மதிப்பெண்.. தமிழ்நாட்டிலேயே முதலிடம்

image

மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் நாமக்கல்லைச் சேர்ந்த ரஜினீஷ் 720/720 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல், 2ஆவது இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப், 3ஆவது இடத்தை சென்னை மாணவி ஷைலஜா பிடித்துள்ளனர். மேலும், 7.5% அரசு இட ஒதுக்கீட்டில் சென்னை சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் படித்த மாணவி ரூபா முதலிடம் பிடித்ததாக, அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

ராகுலை அழைக்காதது ஏன்? CM விளக்கம்

image

கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தியை அழைக்காதது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, BJP உடன் DMK ரகசிய உறவு வைத்துள்ளதாகவும், ராகுலை அழைக்கவில்லை என்றும் எதிர்கட்சியான ADMK கடுமையாக விமர்சித்தது. இதுகுறித்து CM ஸ்டாலின், நாணய வெளியிட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுலை அழைக்கவில்லை எனவும் விளக்கமளித்தார்.

News August 19, 2024

உணர்ச்சி வசப்பட்டார் ஸ்டாலின்

image

பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். EPS போல் ஊர்ந்துசென்று பதவி வாங்கும் அவசியம் DMKக்கு இல்லை என கூறிய அவர், DMK எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கொள்கையோடு இருக்கும் என, இந்திரா காந்தி கூறியதையும் நினைவுகூர்ந்தார். நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டேன் என அண்ணா மீது ஆணையிட்டு அவர் உணர்ச்சி வசப்பட்டார்.

News August 19, 2024

மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு

image

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,630 MBBS இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 மாணவர்கள் இந்தாண்டில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார். மேலும், ஆகஸ்ட்.21 ஆம் தேதி மருத்துவக் தேர்வுக்குழு மூலமாக கலந்தாய்வு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

News August 19, 2024

வங்கி வாடிக்கையாளர்களுக்கு RBI எச்சரிக்கை

image

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வங்கியில் கணக்கு வைத்துள்ள நபர்கள், தங்கள் கணக்கை வேறு நபர்கள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. பணத்துக்கு ஆசைப்பட்டு பிறருக்காக பணம் பெறவோ, பணத்தை அனுப்பவோ செய்தால் சிறை செல்ல நேரிடும் என்று RBI கூறியுள்ளது. வங்கிக் கணக்கு விவரங்களை பிறருக்கு அளிக்க வேண்டாமென்றும் RBI கேட்டுக் கொண்டுள்ளது.

News August 19, 2024

ஒரே நாளில் மோதும் ரஜினி vs சூர்யா

image

ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’ அக்.10ஆம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இருவரின் படமும் ஒரே நாளில் திரைக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து, இருவரின் ரசிகர்களும், வேட்டையன் – கங்குவா போஸ்டர்களை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்கின்றனர். இந்த ரேஸில் வெல்லப்போவது யார் என கமெண்ட் பண்ணுங்க.

News August 19, 2024

KKR இல்லைனா… இந்த அணிக்கு செல்வேன்: ரிங்கு சிங்

image

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் KKR அணியால் ரிங்கு சிங் தக்கவைக்கப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. அந்த அணியில் இடம்பெறவில்லை எனில், வேறெந்த அணிக்கு செல்வார் என, அவரது ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “என் தேர்வு RCB தான். விராட் கோலி இடம்பெற்றுள்ள RCB அணிக்காக விளையாட விரும்புகிறேன்” என அளித்த பதில், எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!