News August 19, 2024

மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு

image

மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 6,630 MBBS இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 மாணவர்கள் இந்தாண்டில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கூறினார். மேலும், ஆகஸ்ட்.21 ஆம் தேதி மருத்துவக் தேர்வுக்குழு மூலமாக கலந்தாய்வு தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News

News January 19, 2026

நிபா வைரஸ்: தமிழக அரசு எச்சரிக்கை

image

மேற்கு வங்கத்தில் பரவிவரும் நிபா வைரஸ் காரணமாக தமிழகத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும் என்றும் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 19, 2026

நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது: கில்

image

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் தாங்கள் விளையாடிய விதம் சற்று ஏமாற்றமளித்தாக இந்திய கேப்டன் கில் கூறியுள்ளார். நாங்கள் சில விஷயங்களை சிந்தித்து மேம்படுத்த வேண்டும் என்று பேசிய கில், விராட் கோலி மற்றும் 8-வது இடத்தில் கலக்கிய ஹர்ஷித் ஆகியோரின் பேட்டிங்கை பாராட்டினார். மேலும், இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

News January 19, 2026

ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரிப்பு

image

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 50,98,474 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 63,25,211-ஐ இது 24.1% அதிகம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வாகனங்களில் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவற்றில், மாருதி சுசுகி 3.95 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.

error: Content is protected !!