news

News August 19, 2024

APPLY NOW: அஞ்சல்துறையில் வேலை

image

சென்னையில் செயல்பட்டுவரும் இந்திய அஞ்சல் துறையில் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 -30 வயதிற்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் www. indiapost.gov.in என்ற இணையதளம் மூலம் ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 19, 2024

நேரடி பணி நியமனத்திற்கு சிராக் பாஸ்வான் எதிர்ப்பு

image

மத்திய அரசின் பணி நியமனங்களில் நேரடி நியமனத்திற்கு மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய அவர், பாஜகவின் கூட்டணி கட்சியாக லோக் ஜனசக்தி இருந்தாலும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார். மத்திய அரசிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News August 19, 2024

சூப்பர் ப்ளூ மூன்.. உடனே பாருங்க

image

இந்த ஆண்டுக்கான சூப்பர் ப்ளூ மூன் இன்று வானில் தோன்றியுள்ளது. ப்ளூ மூன் என்றால், நீல நிறத்தில் நிலா இருக்கும் என அர்த்தமில்லை. நிலவின் சுற்று வட்டப்பாதை குறைந்து, பெளர்ணமி முழு நிலவாக காட்சியளிப்பதும், சில நேரங்களில் வளிமண்டல ஒளி சிதறலால், நீல நிறத்தில் நிலா தெரிவதுமே சூப்பர் ப்ளூ மூன். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை இந்தியாவில் இதனை காணலாம். உங்களுக்கு சூப்பர் ப்ளூ மூன் தெரிந்ததா?

News August 19, 2024

இவர்களுக்காக பணத்தை வீணடிக்காதீர்கள்: கவாஸ்கர்

image

IPL தொடரில் பல அணிகளும் உள்ளூர் வீரர்களை அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்து பணத்தை வீணடிப்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள், முதல் தர போட்டியில் வலுவான எதிரணியுடன் மோதும்போது சிரமப்படுவதாக தெரிவித்தார். கடந்த IPL தொடரில் உள்ளூர் வீரரான ரிஸ்வியை CSK ₹8.4 கோடிக்கு வாங்கியது. அவர் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

News August 19, 2024

கிணற்றுத் தவளை இபிஎஸ்: அண்ணாமலை

image

கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை பற்றி இபிஎஸ் கிணற்றுத் தவளை போல் பேசி வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இபிஎஸ் எதிர்க்கட்சி தலைவராக இருக்க தகுதியானவரா? என்று கேள்வி எழுப்பிய அவர், கள்ள உறவு வைக்கும் அளவுக்கு பாஜக தீண்ட தகாத கட்சி அல்ல என்றும் தெரிவித்தார். 5 முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு, நாணயம் வெளியிட்டதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News August 19, 2024

பிரேமலதாவை ‘G.O.A.T’ படக்குழு சந்தித்தது ஏன்?

image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை விஜய், வெங்கட்பிரபு, அர்ச்சனா ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, ‘G.O.A.T’ படத்தில் விஜயகாந்த் AI மூலம் தோன்றுவதற்கு அனுமதி அளித்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும், விஜயகாந்த் தொடர்பான காட்சிகளை பிரேமலதாவுக்கு படக்குழு காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்தை மீண்டும் திரையில் காண யாரெல்லாம் Waiting..?

News August 19, 2024

சென்னையில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்

image

சென்னையில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோடம்பாக்கத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், பார்த்திபன் என்ற டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா, தஞ்சை, கிருஷ்ணகிரி என பெண்களுக்கு எதிராக அடுத்தடுத்து பாலியல் சம்பவங்கள் அரங்கேறி நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தற்போது நடந்துள்ள நிகழ்வு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2024

‘தங்கலான்’ படக்குழுவை வாழ்த்திய சமுத்திரக்கனி

image

‘தங்கலான்’ படக்குழுவுக்கு நடிகர் சமுத்திரக்கனி வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் உள்ளிட்டோரின் அசுர உழைப்பின் வெளிப்பாடாக இந்த படம் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் இப்படம் ₹53.64 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

ஜம்முவில் தீவிரவாத தாக்குதலில் CRPF வீரர் பலி

image

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சீல் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் CRPF வீரர் ஒருவர் உயிரிழந்தார். உதம்பூர் மாவட்டத்தில் சீல் மற்றும் டூடு பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் CRPF வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் தாக்கியதில் CRPF வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். இதற்கு இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

லேட்டரல் என்ட்ரி முறை இவர்கள் மீதான தாக்குதல்: ராகுல்

image

லேட்டரல் என்ட்ரி முறை தலித், OBC, ஆதிவாசிகள் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியலமைப்பை ஒழிக்கவும், தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பறிக்கவும் பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் முயல்வதாக விமர்சித்துள்ளார். முன்னதாக, லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகத்தின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியானது.

error: Content is protected !!