News August 19, 2024
‘தங்கலான்’ படக்குழுவை வாழ்த்திய சமுத்திரக்கனி

‘தங்கலான்’ படக்குழுவுக்கு நடிகர் சமுத்திரக்கனி வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் உள்ளிட்டோரின் அசுர உழைப்பின் வெளிப்பாடாக இந்த படம் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் இப்படம் ₹53.64 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
டி20 WC-ல் இருந்து பாகிஸ்தான் விலகலா?

வங்கதேசத்திற்கு அநியாயம் நடந்துள்ளது. ICC இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்க கூடாது என பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஒரு அணி (இந்தியா) என்ன முடிவென்றாலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள்; ஆனால் மற்றொரு அணி அதைசெய்ய அனுமதி கிடையாதா என்றும், பாகிஸ்தானும் டி20 WC-ல் இருந்து விலகுமா என்பது அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
News January 25, 2026
TTV-க்கு 300 ‘C’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டன: புகழேந்தி

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்புமணி, தினகரன் ஆகியோருடன் ஒரு கூட்டணிக்காக PM மோடி கைகோர்க்கலாமா என முன்னாள் அதிமுக MLA புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்போது அதிமுக என்ற கட்சியே இல்லை; அதை EPS அணி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், நேற்று EPS-ஐ, ‘அண்ணன்’ என்று அழைத்து, கூட்டணி அமைத்ததற்காக TTV தினகரனுக்கு 300 ‘சி’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 25, 2026
ஜனவரி 25: வரலாற்றில் இன்று

*1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டது. *1971 – இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. *1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன. *1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். *1994 – நாசாவின் ‘கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.


