news

News August 19, 2024

கருணாநிதி நாணய விழாவில் பங்கேற்காத அதிமுக, பாமக

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வேண்டுமென்று இபிஎஸ்சுக்கு திமுக சார்பில் அவரின் வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக சார்பில் இபிஎஸ்சோ அல்லது வேறு தலைவர்களோ பங்கேற்கவில்லை. இதேபோல், பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை.

News August 19, 2024

சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை அவகாசம் நீடிப்பு

image

முதுநிலை சட்டப்படிப்பு (LLM) மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் 2 ஆண்டு முழுநேர சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் இன்று வரை (ஆக.19) இருந்தது. இந்நிலையில் இந்த அவகாசம் வரும் 31ம் தேதி வரை சட்டக்கல்வி இயக்ககம் நீட்டித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு சட்டக்கல்வி இயக்கக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News August 19, 2024

கோலி, ரோஹித்துக்கு ஓய்வு ஏன்? கவாஸ்கர் கேள்வி

image

கோலி மற்றும் ரோஹித் இருவரும் துலீப் கோப்பை தொடரில் ஏன் விளையாடவில்லை என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இருவரும் வங்கதேச தொடரில் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்க உள்ளதாக கூறிய அவர், அணியின் நலனுக்கு அது உகந்ததாக இருக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தார். 35 வயதை கடந்த வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது, அவர்களின் தரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.

News August 19, 2024

திமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணியா?

image

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் CM ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், அண்ணாமலை உள்ளிட்டோர் இடையே பயங்கர நெருக்கம் காணப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பிற கூட்டணி கட்சி தலைவர்களைக் கூட திமுக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதை சுட்டிக்காட்டி திமுக, பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

News August 19, 2024

பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்

image

2024 JV33 சிறுகோள், பூமிக்கு மிக அருகில் இன்று கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 620 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள், சுமார் 28.5 லட்சம் மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை அடிக்கடி கடந்து செல்லும் வகையை சேர்ந்த இந்த சிறுகோள், மணிக்கு 24,779 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்து வருகிறது. இதனை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

News August 19, 2024

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: அதிமுக

image

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் குறித்த அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் EX அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடியால் மக்களவைத் தேர்தலில் பலரால் வாக்கு அளிக்க முடியவில்லை. இதை சரி செய்யவில்லை என்றால் அதிமுக நீதிமன்றம் செல்லும் என்றார்.

News August 19, 2024

சந்தையில் SGBக்கான மவுசு கூடியது!

image

முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கப்பத்திரம் மீதான மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் Real valueஐ விட சுமார் 10% அதிக விலைக்கு வர்த்தகமாகி வருகிறது. தங்க பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்க வேண்டியுள்ளதால், இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பழைய SGBக்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. SGBக்கு முதிர்வு காலத்தில் LTCG கிடையாது.

News August 19, 2024

நாளை முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி

image

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. போட்டோவுடன் கூடிய வோட்டர் லிஸ்ட் திருத்த பணிகளை எலெக்‌ஷன் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக நாளை முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை, அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஓட்டர் லிஸ்ட் சரிபார்த்தல், முரண்பாடுகளை களைதல், தரமான PHOTO இணைத்தல் போன்ற பணிகள் செய்யவுள்ளனர். 2025 ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

News August 19, 2024

விமர்சித்தால் விரல்கள் உடைக்கப்படும்: உதயன் குஹா

image

மம்தாவை விமர்சித்தால், அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என மே.வங்க அமைச்சர் உதயன் குஹாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால் மே.வங்கத்தை வங்கதேசமாக மாற்றிவிடுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார். பெண் பயிற்சி மருத்துவர் மரணத்திற்காக, அவர் பணியாற்றி மருத்துவமனை சூறையாடப்பட்ட போதும் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றார்.

News August 19, 2024

ஹாஸ்பிட்டலில் இருந்து P.சுசீலா டிஸ்சார்ஜ்

image

பிரபல பின்னணி பாடகி P.சுசீலா, ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், 2 நாள்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ள அவர், சிறப்பான சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!