News August 19, 2024
திமுக – பாஜக இடையே மீண்டும் கூட்டணியா?

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் CM ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், அண்ணாமலை உள்ளிட்டோர் இடையே பயங்கர நெருக்கம் காணப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பிற கூட்டணி கட்சி தலைவர்களைக் கூட திமுக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதை சுட்டிக்காட்டி திமுக, பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News January 15, 2026
‘பிளாக் ஃபாரஸ்ட் கேக்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கேக் வகை, பிளாக் ஃபாரஸ்ட். 20-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான இந்த கேக்கிற்கு, ஏன் இந்த பெயர் தெரியுமா? தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ‘பிளாக் ஃபாரஸ்ட்’ மலைப்பகுதியில் விளையும் செர்ரியில் இருந்து தயாரித்த ‘கிர்ஷ்வாசர்’ என்ற பிராந்தியை கொண்டே இந்த கேக் தயாரிக்கப்படுகிறது. இதனாலேயே இவை ‘பிளாக் ஃபாரஸ்ட் கேக்’ என அழைக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்குமா?
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் Pongal Celebration Clicks!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையிலேயே குளித்து புத்தாடைகள் அணிந்து லட்சக்கணக்கானோர் பொங்கலிட்டு வருகின்றனர். இந்நிலையில், புத்தரிசி, கரும்பு, வெல்லமுமாக பானையில் பொங்கல் பொங்கி வருவதை பார்த்து அரசியல் தலைவர்கள் பலர் கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்க்க மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள்.
News January 15, 2026
வரும் பிப்ரவரி 14-ம் தேதி தனுஷுக்கு டும் டும் டும்?

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாக்கூர் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், இருவரும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல் வெளிவந்துள்ளது. நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


