India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணையுடன் வாழ்வது கஷ்டம்; துணை இல்லாமல் வாழ்வது அதைவிட கஷ்டம் என்று நடிகை கங்கனா ரணாவத் மனந்திறந்து பேசியுள்ளார். திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “எனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. இருப்பினும், அது தானாக நடக்க வேண்டும். என் திருமணம் பற்றி எனது பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். இது பல சங்கடங்களை உருவாக்கி விடுகிறது” என பதிலளித்துள்ளார்.
கொடூரமான கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கூட இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவது அரிது. மன்னிப்பு & மனித உரிமைகள் போன்ற பல விஷயங்கள் அவர்களைப் பாதுகாக்கின்றன. ஆனால், சில நாடுகளில் குற்றவாளிகளைக் கொல்வதே சரியெனக் கருதப்படுகிறது. சவுதி (தலை துண்டிப்பு), வடகொரியா (சுட்டுக்கொலை), பாக்., யுஏஇ, சீனா, ஈராக், எகிப்து, கியூபா, ஆப்கன் ஆகிய நாடுகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
சமணர்களை புனல்வாதம் செய்து ஞானசம்பந்தர் வென்ற சைவத்தலம் மதுரை திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயிலாகும். காசிக்கு இணையான முக்தித்தலமாக குறிப்பிடப்படும் நின்ற சீர் நெடுமாறனால் நிர்மாணிக்கப்பட்ட இத்தலத்துக்கு, பவுர்ணமி நாளில் சென்று, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, விரதமிருந்து ஏடகேசருக்கு அபிஷேகம், பட்டு வஸ்திரம் சாற்றி, நெய் தீபமேற்றி, தேவாரம் பாடி வணங்கினால், பிறவிப் பிணி நீங்கும் என்பது ஐதீகம்.
இ-சேவை மையங்கள் மூலம் சுய சான்றிதழ் கட்டட அனுமதி வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் மூலம் பொதுமக்களே சுய சான்று அனுமதி பெறலாம். எனினும், ஏதாவது தவறு நடந்துவிடும் என்ற அச்சத்தால், இன்ஜினியர்கள் மூலம் மக்கள் விண்ணப்பம் செய்கின்றனர். அவர்கள் அரசு கட்டணத்தை விட, கூடுதலாக ₹40,000 வரை கேட்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே, 3ம் நபர் தலையீட்டை தடுக்க இ-சேவை மூலம் சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேடைகளில் ஒருமையில் பேசுவது; கெட்டவார்த்தையில் திட்டுவது என மிஷ்கினின் அட்ராசிட்டி கொஞ்சம் ஓவராகவே சென்றது. இந்நிலையில், நேற்று வாழை திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மேடையில்தான் நாகரீகமாக நடந்துருக்கேன். அதனால் ரொம்ப வருத்தத்தோடும், மகிழ்ச்சியோடும் மேடையில் இருந்து இறங்குறேன். எனது வீடியோக்களை அனுப்பி நண்பர்களே திட்டுறாங்க” எனக் கூறினார்.
கடந்த 2020 முதல் இந்திய ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவில் ஆட்சேர்ப்பு நடத்தப்படாத நிலையில், நேபாள வெளியுறவு அமைச்சர் அர்சு ராணாவின் இந்தியா வருகை, இந்த பிரச்னையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அதற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது கூர்கா படைப்பிரிவில் 15,000 காலியிடங்கள் உள்ளன.
கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால், அதில் உள்ள வைட்டமின் ஏ சருமம் பொலிவு பெறவும், கண் பிரச்னைகளை தடுப்பதற்கும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடையை குறைக்க தினமும் ஒன்று அல்லது 2 கேரட்களை சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள பீட்டா கரோட்டின் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதய நோயாளிகளுக்கு கேரட் ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. ஆண்மை சக்தி பெருக கேரட்டில் தேன் கலந்து சாப்பிடலாம்.
➤10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு முழுவதும் செப். 5ஆம் தேதி ரேஷன் கடை ஊழியர்கள் “ஸ்டிரைக்”கில் ஈடுபடவுள்ளனர். ➤பிரபல பின்னணி பாடகி P.சுசீலா, ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ➤தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. ➤அரசுப் பள்ளிகளுக்கு, விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் சில மருத்துவ தாவரங்களை வீட்டிலேயே வளர்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்கள் மிக்க வெந்தயம், எலுமிச்சை மற்றும் துளசியை வளர்க்கலாம். ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் வளர்க்க வேண்டியது கற்றாழை. வைட்டமின் சி அதிகம் உள்ள புதினா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஸ்வகந்தா, சிறந்த கிருமி நாசினியான வேம்பு ஆகியவற்றை வீட்டில் வளர்க்கலாம்.
சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என RMC அறிவுறுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 km வேகத்திலும் இடையிடையே 55 km வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.