News August 20, 2024

கூர்கா படை பிரச்னையை தீர்க்குமா இந்தியா?

image

கடந்த 2020 முதல் இந்திய ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவில் ஆட்சேர்ப்பு நடத்தப்படாத நிலையில், நேபாள வெளியுறவு அமைச்சர் அர்சு ராணாவின் இந்தியா வருகை, இந்த பிரச்னையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அதற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது கூர்கா படைப்பிரிவில் 15,000 காலியிடங்கள் உள்ளன.

Similar News

News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News January 21, 2026

நிர்மலா சீதாராமன் படைக்கப்போகும் சாதனை!

image

2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணியளவில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இது அவர் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட்டாகும். இதன்மூலம் மொரார்ஜி தேசாய் (6), மன்மோகன் சிங் (5), அருண்ஜெட்லி (5), ப.சிதம்பரம் (5), மற்றும் யஷ்வந்த் சின்ஹா (5) உள்ளிட்ட Ex. நிதி அமைச்சர்களை விட அதிகமுறை மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெறுவார்.

News January 21, 2026

TN-ல் கூலிப் படைகளின் அட்டூழியம்: TTV தினகரன்

image

குற்ற சம்பவங்கள், கூலிப் படைகளின் அட்டூழியம் என TN-ல் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்று TTV தினகரன் கூறியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராடிக்கொண்டிருப்பதாக கூறிய அவர், இந்நேரத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்பதுபோல அரசு செயல்படுவதாக கூறி பெருமை பேசுவது கேலிக்கூத்தானது என்றார். மேலும், மக்கள் மத்தியில் கவர்னர் உரை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!