India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன அழுத்தத்துடனான தன்னுடைய போராட்டம் மற்றும் தற்கொலை எண்ணங்கள் பற்றி கிரிக்கெட் வீரர் உத்தப்பா பகிர்ந்துள்ளார். கிரிக்கெட்டில் எவ்வளவோ கடினமான சூழல்களை எதிர்கொண்டு இருந்தாலும், மன அழுத்தத்தை எதிர்கொள்வது போன்ற கடினம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். நம்மை சார்ந்தவர்களுக்கு நாம் துன்பம் விளைவிப்பதாகவும், எதற்கும் நாம் லாயக்கில்லை என்ற உணர்வை மன அழுத்தம் ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையுடன் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை இணைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட அதிமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருகிற 24ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஆகஸ்ட் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இனி வாரத்திற்கு 3 நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் வராத காரணத்தால் இனி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே நாகையில் இருந்து கப்பல் இயக்கப்படும். இதில் சாதாரண இருக்கைக்கு ₹5,000, பிரீமியம் இருக்கைக்கு ₹7,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவில் உண்மையான சமூக நீதியை கடைபிடிப்பவர் பிரதமர் மோடி தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளாா். ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக உருவாக்கி, இந்திய அரசியலில் சமூக நீதியை மோடி நிலைநாட்டியதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றால் மாநில அரசே நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள 25 மாவட்டங்களில், நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல, நீலகிரி, தென்காசி, தேனி, தஞ்சை, நாகை உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*மேஷம் – புகழ் அதிகரிக்கும்
*ரிஷபம் – அன்பு தேடி வரும்
*மிதுனம் – தடங்கல் ஏற்படும்
*கடகம் – நலம் உண்டாகும்
*சிம்மம் – அமைதியான நாள்
*கன்னி – பெருமையடைவீர்
*துலாம் – பொறுமை தேவை
*விருச்சிகம் – ஜெயம் உண்டாகும்
*தனுசு – அனுகூலமான நாள்
*மகரம் – மகிழ்ச்சி அதிகரிக்கும் *கும்பம் – முயற்சிக்கேற்ற பலன் *மீனம் – சுபமான நாள்
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் 1,376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு <
மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. நாளை காலை 10 மணி முதல் ஆக.27 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 13,417 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக.30இல் இறுதி முடிவுகள் வெளியாகும். செப்.5க்குள் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.