News August 21, 2024
இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து

நாகையிலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இனி வாரத்திற்கு 3 நாள்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் வராத காரணத்தால் இனி செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே நாகையில் இருந்து கப்பல் இயக்கப்படும். இதில் சாதாரண இருக்கைக்கு ₹5,000, பிரீமியம் இருக்கைக்கு ₹7,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
Similar News
News January 23, 2026
பள்ளி மாணவர்களே பரிசுகளை அள்ளுங்க.. சூப்பர் சான்ஸ்!

மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கலைப் போட்டிகளை தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044 – 28192152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். என்ன மாணவர்களே, ரெடியா!
News January 23, 2026
நாளை மக்களுக்கு தெளிவான மெசெஜ்: அண்ணாமலை

ஊழல் நிறைந்த திமுகவை அகற்றி, நம்பகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாளை நடைபெறவிருக்கும் வரலாறு சிறப்பு மிக்க கூட்டமானது, தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைவதுடன், மக்களுக்கு தெளிவான செய்தியை தெரிவிக்கும் எனக் கூறிய அவர், NDA கூட்டணி ஒரு வளமான எதிர்காலத்துக்காக தமிழகத்தின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றார்.
News January 23, 2026
ராசி பலன்கள் (23.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


