India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த சீட்டுகளில் யாராவது அமர்ந்து கொண்டு, நகர மாட்டேன் என அடம்பிடித்தால் டென்ஷன் ஆக வேண்டியதே இல்லை. ரயில்வே Help Line எண்ணான 139-க்கு ஒரு மெசேஜ் தட்டினால் போதும். அதில் உங்கள் சீட் நம்பரையும், PNR நம்பரையும் பிறகு seat occupied by another passenger என டைப் செய்து அனுப்பினால் போதும். 10 நிமிடத்தில் அங்கு வரும் டிடிஆர், சம்பந்தப்பட்டவரை அன்பாக வழியனுப்பி வைப்பார்.
மின்கட்டணம் ₹5,000க்கு மேல் கட்டுவது தொடர்பாக, மின்சார வாரியம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. ₹5,000க்கு மேல் இனி ரொக்கமாக கட்டக்கூடாதென உத்தரவிட்டு, உடனடியாக TNEB அமல்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு இத்தொகை முதலில் ₹20,000ஆக இருந்தது. பின்னர் ₹10,000ஆக குறைக்கப்பட்டு, தற்போது ₹5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, இனி காசோலை, D.D மூலம் பணம் கட்ட ஆணையிட்டுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் எவற்றை சாப்பிடக் கூடாது என டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அவை என்னென்ன? * ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை * சிட்ரஸ் பழங்கள் * காபி * சர்க்கரை உணவுகள் * பச்சை காய்கறி * காரமான உணவு * வாழைப்பழங்கள். இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்புசம், செரிமான பிரச்னை, அடி வயிறு வலி ஏற்படலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
மருத்துவ படிப்புக்கான (MBBS) முதல்கட்ட கலந்தாய்வு, தமிழகத்தில் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, ஆக.27 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய கல்லூரிகளை தேர்வு செய்யலாம். 13,417 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக.30இல் இறுதி முடிவுகள் வெளியாகும். செப்.5க்குள் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு வங்கிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் IBPS அமைப்பு, சமீபத்தில் 896 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு, பி.இ, பி.டெக்., எல்.எல்.பி., எம்பிஏ >படித்தவர்கள் https://www.ibps.in/index.php/specialist-officers/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஆக.21) முடிவடைகிறது. வேலை தேடும் நபர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள்
நாடு முழுவதும் இன்று “பாரத் பந்த்” நடைபெறவுள்ளது. பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு (அருந்ததியர்) வழங்கியது செல்லும் என SC தீர்ப்பளித்தது. இதற்கு எதிரான பந்த்-க்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதனால், வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என RMC கூறியுள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் 26ம் தேதிவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ICC வெளியிட்ட மகளிர் ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (738) ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் (648) 9ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் 3ஆவது இடத்திலும், ஆல் ரவுண்டர் பிரிவில் 5ஆவது இடத்திலும் தீப்தி ஷர்மா உள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 104 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2024ஐ CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். சென்னையில் உள்ள லீலா பேலஸில், இன்று காலை 10 மணிக்கு விழா நடைபெறுகிறது. ₹17,616 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்து, ₹51,157 கோடி முதலீடு கொண்ட 28 திட்டங்களுக்கு CM அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் 1,06,803 வேலை வாய்ப்புகள் உருவாகுமென, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முடிந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என, காங்கிரஸ் தலைமைக்கு கார்த்தி சிதம்பரம் சவால் விடுத்துள்ளார். திமுக அரசின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் கருத்தால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைமையிடம், தமிழக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த கேள்விக்கு, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தாம் பேசியது எப்படி விரோதமாகும் என்றார்.
Sorry, no posts matched your criteria.