News August 21, 2024

தரவரிசையில் 3ஆம் இடத்தைப் பிடித்த மந்தனா

image

ICC வெளியிட்ட மகளிர் ODI பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (738) ஒரு இடம் முன்னேறி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் (648) 9ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் 3ஆவது இடத்திலும், ஆல் ரவுண்டர் பிரிவில் 5ஆவது இடத்திலும் தீப்தி ஷர்மா உள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 104 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.

Similar News

News January 18, 2026

RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

image

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News January 18, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 584 ▶குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று ▶பொருள்: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

News January 18, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!