India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1 நாள் என்பது 24 மணி நேரத்தைக் குறிக்கும் என அனைவரும் அறிந்ததே. ஆனால், இக்கணக்கீடு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுபடுமென ஆதாரத்தோடு சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்களது ஆய்வில், 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கேம்ப்ரியன் வெடிப்பு காரணமாக, நிலவின் ஈர்ப்பு விசை குறைந்து, பூமியின் சுழற்சி பாதிக்கப்பட்டதாகவும், இதனால் நாளின் கால அளவு 26 மணி நேரமாக முன்பு இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
போலந்து பயணத்தை நிறைவு செய்தபின், பிரதமர் மோடி அங்கிருந்து உக்ரைனுக்கு செல்லவுள்ளார். உக்ரைன் ராணுவம் தயாரித்துள்ள Rail Force One என்ற ரயிலில் அவர் பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 20 மணிநேரம் மோடி பயணிக்கவுள்ள அந்த ரயில், நவீன பாதுகாப்பு அம்சங்களையும், விமானத்திற்கு நிகரான வசதிகளையும் கொண்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் இந்த ரயிலில் உக்ரைன் சென்றுள்ளனர்.
இன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.51,157 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். இதன் மூலம் 6.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்கிற நம்பிக்கைதான் இந்த வெற்றிக்கு காரணம்” என பெருமிதத்துடன் கூறினார்.
செல்போன் வந்ததில் இருந்து அதை வைத்து குற்றமும் அதிகரிக்கின்றன. இதை தவிர்க்க சில யோசனைகள். 1) ரகசியம் பேசுகையில் அருகில் இருப்பவர் வீடியோ எடுப்பதாக சந்தேகம் எழுந்தால், உடனடியாக சுதாரிக்கவும் 2) மறுமுனையில் குரலை பதிவு செய்வதாக கருதினால் பேச்சை மாற்றவும் 3) பழைய போனை விற்கையில், மெமரியை அழிக்கவும் 4) அறிமுகமில்லாத நபரிடம் செல்போன் தர வேண்டாம் 5) கடவுச்சொல் பயன்படுத்தவும்.
சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்களை பணியிட மாறுதல் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அவர்களில் செம்பியம் உதவி ஆணையர் பிரவீன் குமாரும் ஒருவர். அவர், சென்னை காவல்துறை பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து புளியந்தோப்பு காவல் உதவி ஆணையர் மாறுதல் செய்யப்பட்டார். இதன்பிறகு, செம்பியம் உதவி ஆணையரும் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு 3 ஆண்டாக நடத்தப்படவில்லை என, அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வி உரிமைச்சட்ட அடிப்படையில் அறிமுகமான அத்தேர்வு, ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இந்த விதியை அரசு மதிப்பதே இல்லை என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டு
உள்ளனர். கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், 57 பேரை பணியிட மாற்றம் செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் iPhone 16 Pro செல்ஃபோன் உற்பத்தியை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஓரிரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐஃபோன் புரோ வகை செல்போன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இதுவரை சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்து வந்தது. சீனாவுக்கு வெளியே iPhone 16 Pro, iPhone 16 Pro Max வகை செல்ஃபோன்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்யவிருப்பது, இதுவே முதல்முறை ஆகும். அந்த பெருமையை தமிழகம் பெறுகிறது.
உயர்பதவிகளுக்கான நியமனங்களை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. பொது மேலாளர், வாரிய தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 13ஆம் தேதி விண்ணப்பம் கோரிய ரயில்வே, லிங்குகளை அனுப்பி, மனுக்களை கேட்டிருந்தது. ஆனால் திடீரென 16ஆம் தேதி நியமன முடிவுகளை நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது. இந்திய பொறியாளர் சேவை மூலம் பணியில் சேர்ந்த அதிகாரிகளிடையே நிலவிய அதிருப்தியும், இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்கும்படி, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சியான BNP, இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் ஹசீனா தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், விசாரணையை எதிர்கொள்ள ஹசீனாவை ஒப்படைக்கும்படி BNP கோரியுள்ளது.
Sorry, no posts matched your criteria.