News August 21, 2024
தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தி விரைவில் தொடக்கம்!

ஆப்பிள் iPhone 16 Pro செல்ஃபோன் உற்பத்தியை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஓரிரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐஃபோன் புரோ வகை செல்போன் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இதுவரை சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்து வந்தது. சீனாவுக்கு வெளியே iPhone 16 Pro, iPhone 16 Pro Max வகை செல்ஃபோன்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்யவிருப்பது, இதுவே முதல்முறை ஆகும். அந்த பெருமையை தமிழகம் பெறுகிறது.
Similar News
News January 21, 2026
திருச்சி: தொழிற்பள்ளி அங்கீகாரம் – கலெக்டர் அறிவிப்பு

2026-27ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் பிப்.28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
NASA-ல் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(60) NASA-ல் இருந்து ஓய்வு பெற்றார். 3 முறை விண்வெளிக்கு பயணித்துள்ள அவர், மொத்தம் 608 நாள்கள் அங்கு கழித்தார். மேலும், 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணங்களையும் (9 முறை) அவர் மேற்கொண்டுள்ளார். 1998-ல் NASA-ல் சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். டிசம்பர் 27-ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளதாக NASA அறிவித்துள்ளது.
News January 21, 2026
திமுகவில் இணைகிறார்.. விஜய்க்கு அதிர்ச்சி

ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் தவெகவுக்கு செல்லவிருப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், களநிலவரம் மாறி மூவரும் தற்போது திமுகவில் இணையவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த சம்பவம் நிகழவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் OPS-ம் திமுகவில் விரைவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


