India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகின் தலைசிறந்த 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ளார். முதலிடத்தில் ஆஸி, முன்னாள் வீரர் ரோட்னி மார்ஷ் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் முறையே தோனி மற்றும் இலங்கையின் சங்கக்கார உள்ளனர். தோனி கூலாக இருப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆடம் தெரிவித்துள்ளார். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கில்கிறிஸ்ட் அந்த பட்டியில் தனக்கு இடமளிக்கவில்லை.
TVK தலைவர் விஜய்க்கு, DMK நெருக்கடி கொடுப்பதாக ADMK Ex மினிஸ்டர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை பனையூரில், நாளை நடைபெறும் TVK கொடி அறிமுக விழாவுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள அவர், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கொடியேற்றும் உரிமை உண்டு என்றார். மேலும், விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் விவாகரத்து செய்யவுள்ளார். ஆஸ்கார் விருது வென்ற இயக்குநர், பென் அஃப்லெக்கை 2022இல் அவர் திருமணம் செய்துகொண்டார். ஹாலிவுட் நட்சத்திரங்களாக இந்த ஜோடி அறியப்பட்ட நிலையில், விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ஏப்ரல் மாதம் முதல் இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். ஜெனிஃபருக்கு, அஃப்லெக் 4ஆவது கணவர் ஆவர்.
50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளை 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இதன் மூலம் விலக்கு கிடைத்துள்ளது. இந்த விலக்கு பெற பணிப்பதிவேட்டில் விவரம் இருக்க வேண்டும் அல்லது நுழைவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 405 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 279 இடங்கள் பராமரிப்பு தொழிற்பழகுநர் அடிப்படையிலானது. மீதமுள்ள 126 இடங்கள் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்டவை ஆகும். இந்த வேலைக்கான விண்ணப்பப் பதிவு, இந்திய அணுசக்தி நிறுவன இணைய தளத்தில் நாளை தொடங்குகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி கடைசி நாளாகும். SHARE IT
தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் ஆக.30 வரை கலைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் நடனம், ஓவியம், பரதம் என பல வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்படும் இந்த விழாவில் வெற்றி பெற்றவர்களின் விவரம் செப்.3இல் வெளியாகும். அதில் தேர்ச்சியானவர்கள் வட்டாரம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்க ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது.
இந்திய ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நவ.22 முதல் ஜன.3 (2025) வரை நடைபெற உள்ளது. இது 23 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் நீண்ட தொடராக அறியப்படுகிறது. முன்னதாக 1991- 92இல் 5 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்ற நிலையில், அதன்பின் 5க்கும் குறைவான போட்டிகள் கொண்ட தொடரே நடைபெற்றது. கடைசி நான்கு பார்டர் – கவாஸ்கர் தொடரை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
TVK கொடி, பாடல் நாளை வெளியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். இதனிடையே, TVK பாடலை தமன் இசையில், விவேக் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் Die heart fan ஆன தமன், மாஸான இசையை கொடுப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விவேக் பற்றி சொல்லவே வேண்டாம். “ஆளப்போறான் தமிழன்…” போன்ற தெறிக்கும் வரிகளை கொடுத்தவர். TVK பாடல் எந்த பாடலை போல இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..?
இயக்குநர் நெல்சன் மனைவி அக்கவுண்டிலிருந்து ₹75 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், நேற்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், ₹75 லட்சம் டிரான்ஸ்ஃபரானதாக தெரிகிறது. இந்த தொகை, ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்காக வழங்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது ஆல் டைம் சிறந்த உலக லெவன் அணியை கம்பீர் தேர்வு செய்துள்ளார். இதில் அவருடன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் யாரும் அந்த பட்டியலில் இல்லை. அணி விவரம்: ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், ஏபி டி வில்லியர்ஸ், பிரையன் லாரா, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இன்சமாம் உல் ஹக், அப்துல் ரசாக், முத்தையா முரளிதரன், சோயப் அக்தர், மோர்னே மோர்கல், ஆண்ட்ரூ பிளின்டாஃப்.
Sorry, no posts matched your criteria.