News August 21, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத்தேர்வில் இருந்து விலக்கு

image

50 வயதை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளை 3 முறை எழுதியும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இதன் மூலம் விலக்கு கிடைத்துள்ளது. இந்த விலக்கு பெற பணிப்பதிவேட்டில் விவரம் இருக்க வேண்டும் அல்லது நுழைவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

நாம் சுவாசிக்கும் காற்றும்.. மாசும்!

image

நாட்டில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது. இந்த நிலையில்தான், இந்திய நகரங்களில், இன்று காலை 6 மணிக்கு நாட்டில் Air quality index எப்படி இருந்தது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. எந்த நகரம் மோசமாக இருந்தது என்பதை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள்.

News November 12, 2025

₹70 கோடி வசூலை வாரி குவித்த ‘பைசன்’

image

துருவ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியான ‘பைசன்’ படம், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம், 25 நாள்களை கடந்து உலகளவில் ₹70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருந்தார்.

News November 12, 2025

தோட்டா தரணியை வாழ்த்திய CM ஸ்டாலின், EPS

image

பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருதை பெறவுள்ள தோட்டா தரணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Oxford-ல் ஒளிரும் பெரியாரின் ஓவியத்தை தந்த தோட்டா தரணிக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார். EPS தன் வாழ்த்து செய்தியில், கலை இயக்கத்தில் மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த தரணியின் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமொரு முத்தாய் ஜொலிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!