India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவோடு அரசியல் உறவு வைத்து திமுக தற்கொலை முயற்சியில் ஈடுபடாது என திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூட்டணி கணக்குகளை எல்லாம் தாண்டி, அரசியல் கட்சிகள் நட்புறவில் இருப்பதில் தவறில்லை என்ற அவர், அரசியலில் இறங்கு முகத்தில் உள்ள பாஜகவோடு திமுக எவ்வித உறவும் வைக்காது என நம்புவதாகவும் தெரிவித்தார். திமுக-பாஜக உறவு என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் கூறியுள்ளார்.
*மேஷம் – ஜெயம் உண்டாகும்
*ரிஷபம் – நஷ்டம் ஏற்படும்
*மிதுனம் – ஆதரவு அதிகரிக்கும்
*கடகம் – அமைதியான நாள்
*சிம்மம் – வரவு தேடி வரும்
*கன்னி – கோபம் ஏற்படும்
*துலாம் – வீம்புகளை தவிர்க்கவும்
*விருச்சிகம் – அனுகூலமான நாள்
*தனுசு – இன்பமான நாள்
*மகரம் – அன்பு அதிகரிக்கும் *கும்பம் – மேன்மை உண்டாகும் *மீனம் – வெற்றிகரமான நாள்
PM மோடி தனது 75ஆவது வயதில் ஓய்வு அறிவிக்க வேண்டுமென BJP மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கட்சி விதிப்படி மோடி 2025 செப். 17 அன்று அரசியலில் இருந்து ஓய்வு அறிவிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வேறு வழிகளில் நாற்காலியை இழக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் FIR பதிய கூட போராட வேண்டியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், நீதி வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார். ஒரு சமூகமாக நாம் எதை நோக்கி செல்கிறோம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரவு 10 மணிக்குள் தூங்குபவர்களுக்கு இதயம், ரத்த ஓட்டம் சார்ந்த நோய் அபாயம் குறைவதாக ஐரோப்பிய இதய இதழின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது ஆழ்ந்த உறக்கத்திற்கான சூழலை உருவாக்குவதாகவும், சரியான நேரத்தில் தூங்குவதன் மூலம் ஹார்மோன்கள் சீராக நிர்வகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. நீங்கள் எத்தனை மணிக்கு தூங்குறீங்க..?
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம், நவம்பர் இறுதிக்குள் அமலாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த அரசு, இதற்கான டெண்டர் அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை எனக் கூறியது. மேலும், டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சுமை குறித்து ஆராய குழு அமைத்துள்ளதாகவும், அதன் அறிக்கைபடி நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு விவசாய சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில், அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குறைந்தபட்ச ஆதரவு விலை மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் புதிய CEO பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார். பிரையன் கலிபோர்னியாவில் வசித்து வருவதால், அவர் சியாட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர 1,600 KM பயணிக்க வேண்டியிருக்கும். நிறுவன கொள்கைபடி, 3 நாள்கள் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளதால், அவர் ஜெட் விமானம் கோரியுள்ளார். அவரது ஆண்டு சம்பளம் ₹13.4 கோடி, இதுதவிர ₹60 கோடி போனஸ் வழங்கப்படும்.
ஆந்திர தம்பதியின் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. மேற்கு கோதாவரியை அடுத்த மார்டீரு கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை பிரத்யுஷாவுக்கு பானேந்திரா என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வினாத்தாள் வடிவில் வடிவமைக்கப்பட்ட அவர்களது பத்திரிகை கவனம் ஈர்த்துள்ளது. அதில், திருமண நாள், மணமகன் பெயர் உள்ளிட்ட வினாடி வினா கேள்விகளுக்கு பதிலளித்து 100க்கு 100 ஆண்டுகள் வாழ வாழ்த்து பெற்றுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆக.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொழில்முனைவோரை ஊக்குவிக்க ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சுற்றுலா வழிகாட்டி உள்பட 17 வகையான விருதுகள் வழங்கப்படும். விவரங்களுக்கு www.tntourismawards.comஐ அணுகவும்.
Sorry, no posts matched your criteria.