News August 21, 2024
அலுவலகம் வர ஜெட் விமானம் கேட்ட Starbucks CEO

காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் புதிய CEO பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார். பிரையன் கலிபோர்னியாவில் வசித்து வருவதால், அவர் சியாட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர 1,600 KM பயணிக்க வேண்டியிருக்கும். நிறுவன கொள்கைபடி, 3 நாள்கள் அலுவலகம் செல்ல வேண்டியுள்ளதால், அவர் ஜெட் விமானம் கோரியுள்ளார். அவரது ஆண்டு சம்பளம் ₹13.4 கோடி, இதுதவிர ₹60 கோடி போனஸ் வழங்கப்படும்.
Similar News
News November 7, 2025
நகை கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000-க்கு பதிலாக ₹7,000 வரை கடன் வழங்க அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இதனை வங்கிகள் இன்னும் செயல்படுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலையொட்டி தள்ளுபடி கிடைக்கும் என பலரும் நகை கடன் வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், முறையான விதிமுறைகளை வகுக்காமல் ₹7,000 வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர்.
News November 7, 2025
கமல் புகுத்திய புதுமைகள்

தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் எழுதியவர் கமல்ஹாசன். தனது சிந்தனை மற்றும் புதிய முயற்சிகளால், தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியவர். எப்போதும் அவரது படங்களில் ஒரு புதுமையான தொழில்நுட்பம் இருக்கும். ‘தமிழ் சினிமாவில் முதல்முறையாக’ என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் எந்த படங்களில் என்ன அறிமுகம் செய்தார் என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 7, 2025
ஹாஸ்பிடலில் நடிகர் அருள்நிதி.. நேரில் சென்ற CM ஸ்டாலின்

ஷூட்டிங்கின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடிகர் அருள்நிதி சென்னை போரூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையறிந்து ஹாஸ்பிடல் சென்ற CM ஸ்டாலின், தனது தம்பி மகனான அருள்நிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அறுவை சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.


