India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் (AI 657) இன்று காலை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வேகமாக இயக்கப்பட்ட விமானம், குறித்த நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருவதால், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமை கொலையைக் கண்டித்து டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், அவர்கள் பணிக்கு திரும்பாவிடில் விடுப்பு எடுத்தவர்களாகவே கருதப்படுவர் என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
படங்களில் தொடர்ந்து நடிக்க அமித் ஷாவிடம் அனுமதி கேட்டுள்ளதாக அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கூறியுள்ளார். எத்தனை படங்களில் நடிக்க போகிறீர்கள் என அமித் ஷா கேட்டதாகவும், அதற்கு 22 படங்களில் நடிக்க விரும்புகிறேன் என தான் கூறியதாகவும் தெரிவித்தார். படங்களில் நடிப்பதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அதற்காக வருந்த மாட்டேன் என்றும், பதவியை தான் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் கார் விற்பனையில் TATA பஞ்ச் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 1,26,000 TATA பஞ்ச் கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. மாருதி சூசுகியின் வேகன் ஆர் 1.16 லட்சம் கார்கள் விற்பனையாகி 2ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஜன – ஜூன் மாத நிலவரப்படி கார் விற்பனையில் பஞ்ச் 4ஆவது இடத்தில் இருந்தது. அதன்பிறகு விற்பனை அதிகரிக்கவே முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
த.வெ.க. கொடியை இன்று அறிமுகம் செய்த விஜய், கட்சிப் பாடல் ஒன்றையும் வெளியிட்டார். ‘தமிழன் கொடி பறக்குது’ என தொடங்கும் அந்த பாடலில், போர்க்களம் போல கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளன. அதில் யானை மீது வரும் விஜய், தனது எதிரிகளை வெறித்தனமாக வேட்டையாடுகிறார். அரசியலுக்கு விஜய் ஆவேசமாக வந்திருப்பதை குறிப்பதாகவே இது உள்ளது. அப்படியெனில், அவர் யாரை வேட்டையாட போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
CM ஸ்டாலின் அமெரிக்கா செல்வதை முன்னிட்டு தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தெரிகிறது. மூத்த அமைச்சர் உள்பட 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், 3 புதியவர்களுக்கு அமைச்சராக வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும், அமைச்சர்களின் இலாகா மாற்றமும் பெரிய அளவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் கட்சியின் கொடியில் மேலும், கீழும் அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளன. மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகை மலர், நட்சத்திரங்கள் உள்ளன. வாகை மலரின் இருபக்கமும் கால்களை தூக்கியபடி 2 போர் யானைகள் பிளிறியபடி உள்ளன. பொதுவாக, பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் போருக்கு சென்று வெற்றி சூடியபிறகு அணிவது வாகை மலராகும். விஜய் கட்சியின் இந்த கொடி எப்படி உள்ளது? உங்களது கருத்தை பதிவிடுங்கள்.
பனையூரில் தவெக கட்சி கொடியேற்ற விழா சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. விழாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். விழாவின் நிறைவில் மீண்டும் மேடை ஏறிய தவெக தலைவர் விஜய், தொண்டர்களை பார்த்து பாசத்துடன் சாப்பிட்டு விட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதேபோல், விழாவுக்கு தனது பெற்றோர் வந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும் விஜய் கூறினார்.
பனையூரில் தவெக கட்சிக் கொடியேற்ற விழாவில் விஜய் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார். தவெக கட்சி கொடியேற்ற விழாவில் நடிகர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும், பிற கட்சிகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 20 நிமிடம் பேசுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் பேச்சை சுருக்கமாக பேசி விஜய் முடித்துக்கொண்டார். பிற கட்சிகளை அவர் விமர்சிக்கவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் முன்பும், தமிழக மக்கள் முன்பும் கொடியை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. இது நமது கட்சிக் கொடி மட்டுமல்ல. வருங்கால தலைமுறையினரின் வெற்றிக் கொடியாக இருக்கும். நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.
Sorry, no posts matched your criteria.