News August 22, 2024
நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம் – விஜய் அறைகூவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் முன்பும், தமிழக மக்கள் முன்பும் கொடியை அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. இது நமது கட்சிக் கொடி மட்டுமல்ல. வருங்கால தலைமுறையினரின் வெற்றிக் கொடியாக இருக்கும். நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.
Similar News
News November 18, 2025
அதிமுகவிடம் 50+ தொகுதிகளை கேட்கிறதா பாஜக?

கூட்டணியில் இன்னும் எத்தனை கட்சிகள் வரப்போகின்றன என்பதை பொறுத்துதான் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முடிவு செய்யப்படும் என நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். 50+ தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது என சொல்வது தவறு என்ற அவர், தேர்தல் காலம் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் என விளக்கமளித்துள்ளார். அத்துடன், தொகுதி பங்கீட்டை அதிமுக, பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.

100 ரஃபேல் விமானங்களை வாங்கும் உக்ரைன்

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க பிரான்ஸிடம் இருந்து 100 ரஃபேல் போர் விமானங்களை வாங்க உக்ரைன் முடிவு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டுள்ளனர். 2035-ம் ஆண்டுக்குள் இப்போர் விமானங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டசால்ட் ஏவியேஷன் தயாரிக்கும் ரஃபேல் போர் விமானங்கள், ஆபரேசன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.