India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘வாழை’ திரைப்படம் தனது சினிமா கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்துமென நடிகை நிகிலா விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘வாழை’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த அவர், இயக்குநர் மாரி செல்வராஜ் நினைத்தது வரும் வரைக்கும் எத்தனை டேக் போனாலும், கவலைப்பட மாட்டார். அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்த கதாபாத்திரத்தை நான் பிரதிபலித்தாக வேண்டும். அது எனக்கு கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது என கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை பாராட்டியது ஏன் என்பது குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். CAA சட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் பாஜக கொள்கைகளை விஜய் விமர்சித்து வருகிறார். அப்படி இருக்கையில் அவரை குஷ்பு அண்மையில் தனது பேட்டியில் பாராட்டி இருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, விஜய் தனது தம்பி மாதிரி என்றும், அவரை புத்திசாலி என்று பாராட்டி இருந்தேன். அதில் தவறில்லை என்று கூறினார்.
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் உற்றுநோக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு அண்மையில் சென்ற மோடி, நடுநிலையை நிரூபிக்க உக்ரைனுக்கு இன்று செல்கிறார். ஆரம்பம் முதல் ரஷ்யாவை இந்தியா ஆதரிப்பதாக குற்றம்சாட்டும் அமெரிக்காவும், இதேபோல், மோடி உக்ரைனிடம் என்ன முன்வைக்க போகிறார் என்று ரஷ்யாவும் உற்றுநோக்கி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் கைதாவதற்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
அமேசான் ப்ரைம் OTT தளத்தில் கல்கி திரைப்படம் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கல்கி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ₹1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதையடுத்து, அமேசான் ப்ரைமில் நேற்று வெளியாகி உள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், விஜய் தேவர கொண்டா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா, 2ஆவது இடம் பிடித்தார். தனது கடைசி முயற்சியில் அதிகபட்சமாக 89.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, வெள்ளி வென்றார். இது இந்த சீசனில் அவரது சிறந்த சாதனையாகும். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 90.61 தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
திமுகவின் பாஜக எதிர்ப்பு இனி மக்களிடம் எடுபடாது என்று ADMK மூத்த தலைவர் ஜெயக்குமார் சாடியுள்ளார். கருணாநிதி நாணய விழாவில் திமுக, பாஜக தலைவர்கள் இடையே நிலவிய இணக்கத்தை விமர்சித்த அவர், திமுக மூத்தத் தலைவர்கள் பலர் மீது வழக்குகள் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால், திமுகவின் ஊழல் தப்பும் என்ற எண்ணத்தில், திமுக இப்படி செய்கிறது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
சக்தி தேவியின் பல அவதாரங்களில், உக்கிரமும் கருணையும் கொண்டதாகத் திகழ்பவர் துர்க்கை தேவி என்கிறது புராணம். கும்பகோணம் கதிராமங்கலத்தில் வனதுர்க்கை பரமேஸ்வரியாக காட்சி தரும் அவருக்கு மாலை 4 முதல் 6 மணிக்குள் அபிஷேகம் & குங்கும அர்ச்சனை செய்து, சிவப்பு சேலை சாற்றி, எலுமிச்சை மாலை அணிவித்து, பசு நெய் விளக்கேற்றி வழிபட்டால், ராகுவின் வக்கிர பார்வை மறைந்து, வாழ்வில் நல்லவை கைக்கூடும் என்பது ஐதீகம்.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை மையம் (RMC) தெரிவித்துள்ளது. நாளை முதல் 28 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் RMC கணித்துள்ளது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனவும் RMC முன்னறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை என்பதால் நாளை வங்கிகளுக்கு விடுமுறையாகும். நாளை மறுநாள் ஞாயிறு என்பதால் வழக்கம்போல் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அதையடுத்த நாளான திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விடுமுறை விடப்படுகின்றன. தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் முக்கியப்பணிகள் இருப்பின் இன்று முடித்துக்கொள்வது நல்லது.
Sorry, no posts matched your criteria.