News August 23, 2024

மாரி இயக்கத்தில் நடித்தது சவாலாகத்தான் இருந்தது: நிகிலா

image

‘வாழை’ திரைப்படம் தனது சினிமா கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்துமென நடிகை நிகிலா விமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘வாழை’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த அவர், இயக்குநர் மாரி செல்வராஜ் நினைத்தது வரும் வரைக்கும் எத்தனை டேக் போனாலும், கவலைப்பட மாட்டார். அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்த கதாபாத்திரத்தை நான் பிரதிபலித்தாக வேண்டும். அது எனக்கு கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது என கூறியுள்ளார்.

Similar News

News November 12, 2025

ஜடேஜா, சாம் கரன் டிரேடில் உருவான சிக்கல்

image

ஜடேஜா, சாம் கரனை கொடுத்துவிட்டு RR அணியிடமிருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்கும் ஒப்பந்தம் உறுதியாகிவிட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராததற்கு காரணம் RR-ல் இருக்கும் வெளிநாட்டு வீரர்கள்தான். அந்த அணியில் ஏற்கெனவே 8 வெளிநாட்டு வீரர்கள் உள்ளதால், அதில் சாம் கரனை இணைப்பது சிக்கலாக உள்ளது. இதனால் RR ஹசரங்கா அல்லது தீக்‌ஷனாவை விடுவிக்க பரிசீலித்து வருகிறது.

News November 12, 2025

ஸ்டாலின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள்: நிர்மலா

image

மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். SIR-க்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிக்கிறது எனக் கூறிய அவர், SIR என்றால் என்ன என்றே தெரியாமல் உதயநிதி ‘ரிவிஷன்’ என்பதை ‘ரெஸ்ட்ரிக்‌ஷன்’ என சொல்வதாக விமர்சித்தார். மேலும், தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக, இதுபோன்ற நிலைப்பட்டை எடுப்பதாக சாடினார்.

News November 12, 2025

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $23.64 உயர்ந்து $4,137-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. நேற்று (நவ.11) ஒரே நாளில் சவரனுக்கு ₹1,760 அதிகரித்து, ₹93,600 -க்கு விற்பனையானது. SHARE.

error: Content is protected !!