news

News August 24, 2024

பிளாஸ்டிக் கரன்சி பயன்படுத்தும் நாடுகள்

image

ஆஸி., நியூசிலாந்து, கனடா, வியட்நாம் உள்பட 40 நாடுகளில் பாலிமர் பிளாஸ்டிக் <<13932692>>கரன்சி<<>> பயன்படுத்தப்படுகிறது. ஆஸி. முதல் முறையாக 1998ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகம் செய்தது. கள்ள நோட்டுகளை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் இந்த கரன்சி நோட்டுகள் உருவாக்கப்படுகின்றன. அதே போல, எளிதில் கிழியாது என்பதால், பிரின்டிங் செலவும் குறைகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சியை எதிர்பார்க்கிறீர்களா?

News August 24, 2024

தேர்தலுக்கு முன்பே தோல்வி பயம்: காங்கிரஸ்

image

ஹரியானாவில் தேர்தலுக்கு முன்பே, பாஜக தோல்வியை ஏற்றுக்கொண்டதாக அம்மாநில காங்., தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா விமர்சித்துள்ளார். அரசியல் உள்நோக்கம் காரணமாக பாஜக தேர்தலை ஒத்திவைக்க கோருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். பாஜக அரசாங்கம் மேலும் ஒருநாள் கூடுதலாக தொடர்வதை கூட மக்கள் விரும்பவில்லை என்ற அவர், தேர்தலை திட்டமிட்டப்படி தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News August 24, 2024

பாகிஸ்தானில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

image

பாகிஸ்தானில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக ₹10, ₹50, ₹100, ₹500, ₹1,000 மற்றும் ₹5,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டுகள் வரும் டிச. முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், பழைய ரூபாய் நோட்டுகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிக்கும் சமித் டிராவிட்

image

இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட்டின் மகன் சமித் கர்நாடகாவில் நடைபெற்றுவரும் ‘மகாராஜா டிராஃபி டி20’ தொடரில் விளையாடி வருகிறார். மைசூரு வாரியர்ஸ் அணிக்காக ஆடிவரும் அவர், இதுவரை 7 போட்டிகளில் விளையாடி சொற்ப ரன்களே எடுத்துள்ளார். இன்று குல்பர்கா அணிக்கு எதிரான போட்டியிலும் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கிடைக்கும் வாய்ப்புகளை அவர் வீணடித்து வருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

News August 24, 2024

இனி 7 மணிக்கு பணிக்கு வர வேண்டும்: போலீசார் அலர்ட்

image

மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் “பயோ மெட்ரிக்” கருவிகள் பொருத்தப்படுகிறது. போலீசார் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை. வருகை பதிவேடுகளில் விடுமுறை எடுப்பதை குறிப்பிடுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இனி போலீசார் காலை 7 மணிக்கு பணிக்கு வந்து, விரல்ரேகை மூலம் அட்டெண்டன்ஸ் வைக்க வேண்டும். கால தாமதமாக பணிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2024

பாகிஸ்தானுக்கு எதிராக புதிய சாதனை படைத்த வங்கதேசம்

image

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 565 ரன்கள் எடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் வங்கதேசம் எடுக்கும் அதிகபட்ச ரன்னாகும். முன்னதாக 555/6 ரன்கள் எடுத்ததே பாக்., அணிக்கு எதிராக அந்த அணியின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடிய முஸ்தஃபிசுர் ரஹீம் 191, சதாம் இஸ்லாம் 93, மெஹிதி ஹசன் 77 ரன்கள் எடுத்தனர்.

News August 24, 2024

Golden sparrowஐ அறிமுகம் செய்த தனுஷ்

image

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடலான “Golden sparrow…” விரைவில் வெளியாகும் என இயக்குநர் தனுஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்திற்கு GVP இசையமைத்துள்ளார். காதல் கதையை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் குறித்து உங்களது எதிர்பார்ப்பு என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News August 24, 2024

மனசு ரொம்ப கவலையா இருக்கா.. இதை சாப்பிடுங்க

image

ஒருகாலத்தில் Stress என்பதற்கு பலருக்கும் அர்த்தம் தெரியாது. ஆனால் இன்றோ இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுசுகளே, “ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு ப்ரோ” என சொல்லும் அளவுக்கு வாழ்வியல் முறை மாறிவிட்டது. வாழைப்பழங்களும், மாதுளைப் பழங்களும் creatine, dopamine ஆகிய மகிழ்ச்சி ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்கிறது. மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தாலே மனம் குதூகலமாக மாறும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News August 24, 2024

பெண் மருத்துவர் கொலையில் சந்தேகம் கிளப்பும் பப்பு யாதவ்

image

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் மரணத்துக்கு, சக மருத்துவர்களே காரணம் என சுயேட்சை எம்பி பப்பு யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மருத்துவ மற்றும் போதை மாஃபியாக்கள் இந்த கொலைக்கு
பின்புலத்தில் இருப்பதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். பிஹார் மற்றும் உத்தரகாண்டில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதாக அதிருப்தி தெரிவித்த அவர், சில கட்சிகள் இதுமாதிரியான குற்றவாளிகளுக்கு சீட் அளிக்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.

News August 24, 2024

அப்பா ஆனார் பாக்., கிரிக்கெட் வீரர்

image

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி – அன்ஷா தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு அலி யர் என பெயரிட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அஃப்ரிடிக்கு, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்கு வசதியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!