News August 26, 2024
ராகுல் சொல்லி கட்சி ஆரம்பித்தாரா விஜய்?

ராகுல்காந்தி சொல்லித்தான் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது எனக் கூறினார். மேலும், “குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் தான் முதலில் இருந்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பிடிவாதம் பிடித்ததால், நான் விட்டுக்கொடுத்து விட்டேன்” எனத் தெரிவித்தார்.
Similar News
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.
News July 9, 2025
லார்ட்ஸ் வெற்றியில் 4-வது கேப்டனாக மாறுவாரா கில்?

இங்கி.,க்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ல் தொடங்குகிறது. இங்கு இதற்கு முன்பு 1986-ல் கபில் தேவ் கேப்டன்சியிலான இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, 2014-ல் தோனி தலைமையில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தொடர்ந்து, 2021-ல் கோலி கேப்டனாக இருந்தபோது 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் இந்த கிளப்பில் இணைவாரா?
News July 9, 2025
வங்கியில் 2,500 காலியிடங்கள்.. ₹85,920 வரை சம்பளம்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள 2500 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 -30 வயதுக்குட்டப்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹48,480– ₹85,920 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 24-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <