India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உ.பி.யில் இளம்பெண்னை (17) ஒருவரை அவரது வருங்கால கணவரின் கண்முன்னே 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை POCSO-வில் 8 பேர் கைதாகி இருக்கின்றனர். அவர்களில் கைதான, அகிலேஷ் பிரதாப் சிங் லோக்கல் BJP காஸ்கஞ்ச் பகுதியின் MLA-வுடன் நெருக்கமாக இருப்பவர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 18 நாள்களில் மட்டும் 4 முறை UPI பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஒரு நிமிடம் செயலிழந்தாலும், 4 லட்சம் பேர் பாதிப்பார்கள். நாடு முழுவதும் 40 கோடி பேர் UPI பரிவர்த்தனையை நம்பியிருக்கும் சூழலில், அடிக்கடி செயலிழந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்புகின்றனர் நிதி நிறுவன நிர்வாகிகள். இதற்கு தீர்வு காண மத்திய அரசின் NPCI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
அதிமுக குறித்து அதிமுக <<16095694>>Ex MLA குணசேகரன்<<>> பேசுவது நல்லதற்கு அல்ல என அக்கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாலர் கார்த்திக் மிரட்டல் தொனியில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முடிவு எடுத்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பேசக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அதிமுகவினரை மிகவும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்க கருத்து என்ன?
NCERT ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்பு இந்தியில் மாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CBSE பாடநூல்களின் தலைப்புகள் ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ் என இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதாக கேரள அமைச்சர் சிவன் குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். NCERT தொடங்கி நாள்தோறும் MPக்களுக்கு எழுதும் கடிதம் வரை இந்தியை திணிப்பதா என மதுரை MP சு.வெங்கடேசனும் கண்டித்துள்ளார்.
அடுத்தடுத்த அரிவாள் வெட்டு சம்பவங்கள் தென் மாவட்டங்களை அதிரச் செய்துள்ளன. பாளையங்கோட்டையில் பள்ளிக்குள் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோன்ற சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. காதலியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டு காதலித்த பெண், திடீரென பேசாமல் ஒதுங்கியதால் அவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு பெற்றதற்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக பேரவையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு அவரும் நன்றி கூறினார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியதால் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். கடந்த 28-ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9,13,306 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்காக 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் மே 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராத்திரி நன்றாக தூங்கினாலும், சிலருக்கு பகல் நேரத்திலும் தூக்கம் வந்துவிடும். இந்த பகல்நேர தூக்கத்தின் காரணம் தெரியுமா? மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள். ஆரோக்கியமற்ற தூக்கத்திற்கு வைட்டமின் டி, இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், மருந்துகள் எடுப்பதும் பகல்நேர தூக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். நீங்களும் பகலில் தூங்குறீங்களா?
மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் தமிழக அரசு உயர்நிலைக்குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் இக்குழு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யும். இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 7 நாள்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ₹5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.