News April 15, 2025
அடிக்கடி செயலிழக்கும் UPI: தீர்வு என்ன?

கடந்த 18 நாள்களில் மட்டும் 4 முறை UPI பரிவர்த்தனைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. ஒரு நிமிடம் செயலிழந்தாலும், 4 லட்சம் பேர் பாதிப்பார்கள். நாடு முழுவதும் 40 கோடி பேர் UPI பரிவர்த்தனையை நம்பியிருக்கும் சூழலில், அடிக்கடி செயலிழந்தால் என்ன ஆகும் என கேள்வி எழுப்புகின்றனர் நிதி நிறுவன நிர்வாகிகள். இதற்கு தீர்வு காண மத்திய அரசின் NPCI நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News July 11, 2025
BREAKING: பள்ளி முதல்வர் அதிரடி கைது!

மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவம் தானேவில் உள்ள RS தமானி பள்ளியில் நடந்துள்ளது. கழிவறையில் ரத்தக்கறை இருந்ததால் அதனை செய்தது யார் என்பதை அறிய இந்த கொடூரத்தை அரங்கேற்றிய பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட், பெண் ஊழியர் நந்தா இருவரும் நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் பெண்களா? என நெட்டிசன்கள் சாடுகின்றனர்.
News July 11, 2025
காலையில் இத பண்ணுங்க…

நல்ல தூக்கம் மட்டுமின்றி, காலையில் செய்யும் ஒரு சில விஷயங்கள், அன்றைய நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்
*வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகள் வெளியேற உதவியாக இருக்கும் *சுறுசுறுப்பாக இருக்க, உடற்பயிற்சி செய்யுங்க *தியானம், மன அமைதிக்கு உதவும் *எந்த காரணத்திற்கும் டிபனை உட்கொள்ளாமல் இருக்க வேண்டாம். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
News July 11, 2025
பெங்களூருவில் தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்

பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் 7000 பேரை தெருநாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டசத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் ரைஸ் வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதற்காக ஆண்டுக்கு ₹2.88 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் மூலம் தினமும் 5000 நாய்கள் பயனடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.