India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், மலையாள முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் இருந்து விலக நினைத்த போது, டைரக்டரும், தயாரிப்பாளரும் மன்னிப்பு கேட்டதால், வேறு வழியின்றி அப்படத்தில் நடித்ததாக தெரிவித்தார். வின்சி அலோஷியஸ் ஜன கண மன, சவுதி வெள்ளக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர் யாராக இருக்கும்?
சட்டப்பேரவையில் இருந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கே,என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு அதனை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘OG’ படத்தில் சிம்பு Firestorm என்ற பாடலை பாடியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் தமன், ‘Mass Rampage coming soon’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தமன் இசையில் விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி’ பெரிய ஹிட்டான நிலையில், அது போன்ற ஒரு வெறித்தனமான பாடலாக இதுவும் இருக்குமா?
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ₹760 உயர்ந்துள்ளது. நேற்று 1 கிராம் ₹8,720-க்கும், 1 சவரன் தங்கம் ₹69,760-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ₹95 உயர்ந்து, ₹8,815-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ₹760 அதிகரித்து, ₹70,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1 கிராம் ₹35-ம், 1 சவரன் தங்கம் ₹280-ம் குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதே போல், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
BSP மாநில தலைவர் ஆனந்தன் மீது பொற்காெடி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். BSP-யிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பாேது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை நடத்துவதாக கூறி கட்சிக்குள் வந்துவிட்டு, தன்னையே ஆனந்தன் நீக்கி விட்டதாக விமர்சித்தார். இதன் பின்னணி குறித்து தெரியவில்லை, கட்சியின் பாெதுக் குழுவை கூட்டி விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.
ஹரியானா, குருகிராமில் கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. 46 வயதான விமானப் பணிப்பெண் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மயங்கியுள்ளார். உடனே தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட, ICU-வில் அவரை வெண்டிலேட்டரில் வைத்துள்ளனர். வெளியே அவரது கணவர் பரிதவிக்க, உள்ளே வார்டு ஊழியர்கள் சிலர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆனதும் இந்த கொடூரத்தை அவர் கூற, போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சியை தொடங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு பிஎஸ்பி மாநிலத் தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவருடன் நிலவிய கருத்து வேறுபாடால் கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் கட்சி என்ற பெயரில் புது கட்சி தொடங்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
1) CM ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை துணை வேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் 2) நீலகிரி மாவட்ட காங். தலைவர் ராஜ்குமார் சடலமாக மீட்பு 3) நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங். போராட்டம் 4) ஆப்கானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி 5) IPL: டெல்லி – ராஜஸ்தான் அணிகள் இன்றிரவு 7.30 மணிக்கு பலப்பரீட்சை.
Sorry, no posts matched your criteria.