News April 16, 2025
சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் இருந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கே,என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு அதனை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Similar News
News July 9, 2025
திமுக EX எம்எல்ஏ காலமானார்.. ஸ்டாலின் இரங்கல்

காவேரிபட்டினம் தொகுதி திமுக EX எம்எல்ஏ கோவிந்தசாமி மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 1964-65ம் ஆண்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போர் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் கோவிந்தசாமி என புகழாரம் சூட்டியுள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகனோடு இணைந்து பணியாற்றியவர் கோவிந்தசாமி என்றும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
₹77 லட்சம் ஏமாந்த ஆலியா… ஆட்டய போட்ட அசிஸ்டென்ட்

Eternal Sunshine Productions என்ற தயாரிப்பு நிறுவனத்தை பாலிவுட் நடிகை ஆலியா பட் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருடன் பணியாற்றிய Ex தனி உதவியாளர் வேதிகா பிரகாஷ் ஷெட்டி என்பவர், தயாரிப்பு நிறுவனம் & ஆலியாவின் அக்கவுண்டில் இருந்து ₹76.9 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின்பேரில், வேதிகாவை பெங்களூருவில் வைத்து மும்பை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News July 9, 2025
சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.