India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவை எதிர்ப்பதாக கூறி திமுக இரட்டை வேடம் போடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பாஜகவை சங்கி என்று விமர்சிக்கும் திமுக, தனக்கு தேவைப்படும் போது மட்டும் அரவணைத்து கொள்வதாக குற்றம் சாட்டினார். மக்களின் நலனை புறக்கணித்து, தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திமுக தனது நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும் அவர் சாடினார்.
யுவன் சங்கர் ராஜா வாடகை விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரிடம் விளக்கம் கேட்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஜமீலா என்பவரின் வீட்டை யுவன் வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், ₹20 லட்சம் வாடகை பாக்கி தராமல் இரவோடு இரவாக காலி செய்ததாக ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் புகார் அளித்திருந்தார்.
கிருஷ்ணகிரியில் NCC கேம்பில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கைது செய்யப்பட்ட முன்னாள் நாதக நிர்வாகி சிவராமன் போலி NCC மாஸ்டர் என்பதும், அந்த தனியார் பள்ளியில் நடந்தது போலியான கேம்ப் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே, அவர் இதே போன்று சூளகிரியில் உள்ள 3 பள்ளிகளிலும் போலி NCC கேம்ப் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
இந்திய மசாலாப் பொருட்களின் மாதிரிகளில் 12% தரமற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூலையில் இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட 4,054 இல் 474 மாதிரிகளின் தரம் & பாதுகாப்பு அளவீடுகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக FSSAI கண்டறிந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. MDH & எவரெஸ்ட் பிராண்டுகளின் தயாரிப்புகள் நுகர்வுக்கு தகுந்தவையல்ல எனக் கூறி நியூசி., அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை செய்துள்ளன.
திமுக-பாஜக ரகசிய கூட்டணி என்ற இபிஎஸ் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அழைப்பின் பேரில், கலைஞர் நாணய வெளியீட்டில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவித்த அவர், நாணய வெளியீட்டை அரசியல் கடந்து பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன் எம்ஜிஆர், அண்ணா உள்ளிட்டவர்களுக்கும் நாணயம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் கல்வி TVயில், இன்று முதல் 5 நாள்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. TNPSC, போலீஸ், ஆசிரியர், ரயில்வே, BANK போட்டித் தேர்வுகளுக்கு TN Career Services Employment என்ற Youtube சேனலில் பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகிறது. இன்று முதல் ஆக.23 வரை நாள்தோறும், 7-9 AM வரை நேரலையிலும், 7-9 PM வரை மறு ஒளிபரப்பும் செய்யப்படும். பிற விவரங்களை <
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் பேச்சுக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சுரேஷ் கோபி இந்தியாவுக்கு அமைச்சரா அல்லது கேரளாவுக்கு மட்டும் அமைச்சரா என கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் தலையிட்டு முல்லைப்பெரியாறில் மத்திய அரசின் நிலையை விளக்க வேண்டும் என்றார். முன்னதாக, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என சுரேஷ் கோபி தெரிவித்திருந்தார்.
‘ரஜினி’ தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் சுபிக்ஷா. தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வரும் இவர், 2020ஆம் ஆண்டு கோரியோஃகிராபர் மானஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்ததாக தகவல் பரவியது. இந்நிலையில், அவினாஷ் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
உணவு டெலிவரி நிறுவனமான Zomato, தங்கைக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து கூறியது பயனர்களை சிரிக்க வைத்துள்ளது. X பக்கத்தில் பதிவிட்டுள்ள Zomato, தத்தெடுத்த தங்கை என Blinkitஐ குறிப்பிட்டு, பாச மழை பொழிந்துள்ளது. இதற்கு ரிப்ளை செய்துள்ள Blinkit, தத்தெடுத்த தங்கை அல்ல, வாங்கிய தங்கை என குறிப்பிட்டு, வளர்ந்து விட்டீர்கள் ஆனால், இதை கூட கற்கவில்லை என கிண்டல் செய்துள்ளது. 2022இல் Blinkitஐ Zomato வாங்கியது.
தமிழக ரயில் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்திய அவர், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை விட, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டின் அளவு குறைந்துள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.