News September 13, 2024

காவல்துறை அமைச்சரிடமே ஆட்டையை போட்ட திருடன்

image

இங்கிலாந்தில் காவல்துறை அமைச்சரின் Bag திருடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வருடாந்திர போலீஸ் மாநாட்டில் அமைச்சர் டேம் டயானா ஜான்சன் பங்கேற்று, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வந்தார். அப்போது அவரது பை திருடப்பட்டது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்தேகத்திற்குரிய நபரை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் பிணையில் விடுவித்தனர்.

Similar News

News February 19, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.19) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 19, 2026

டிகிரி போதும்.. ₹75,000 வரை சம்பளம்!

image

வேலூர் SIMCO-வில் 48 Ayush டாக்டர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. *வயது: 22- 40 *கல்வித்தகுதி: மருத்துவப் பிரிவில் (BSMS / BAMS / BHMS / BUMS) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். *தேர்ச்சி முறை: கல்வித் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு * மார்ச் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹25,000 – ₹75,000 வரை *விண்ணப்ப படிவம் பெற <>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT!

News February 19, 2026

கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாற்றமா? திருமாவளவன்

image

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும் என திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், மதுவை ஒழிக்கும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. எனவே, மது ஒழிப்பு குறித்து திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூற வேண்டும் என்றார். மேலும், கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாறும் அவசியம் விசிகவுக்கு இல்லை என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

error: Content is protected !!